பட்டத்து இளவரசர் உதயநிதியின் பிரியமான உணவு "மான் கறி" - கள்ளதுப்பாக்கி சம்பவத்தின் பகீர் பின்னணி.! #DMK #UdhayanithiStalin @Udhaystalin
பட்டத்து இளவரசர் உதயநிதியின் பிரியமான உணவு "மான் கறி" - கள்ளதுப்பாக்கி சம்பவத்தின் பகீர் பின்னணி.! #DMK #UdhayanithiStalin @Udhaystalin

மதன் ரவிச்சந்திரனின் 'சேனல் விஷன்' யூ ட்யூப் சேனலுக்காக திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் கள்ளத்துப்பாக்கி வைத்து நடத்திய துப்பாக்கி சூட்டின் பின்னணி'யை தனது இரண்டாவது வீடியோ'வின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார். இதில் பல திடுக்கிடும் சம்பவங்கள் அந்த ஊரை சேர்ந்த ஒரு நபரின் வாக்குமூலமாகவே வந்துள்ளது.
இதன் பின்னணியானது மான் வேட்டையின் மூலமே என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மதன் ரவிச்சந்திரன் வீடியோ'வில் விவரிக்கையில், "திருப்போரூர் சம்பவத்தை வைத்து அதன் அடிப்படையை ஆராய எனக்கு 6 மணி நேரங்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சம்பவம் நடந்த அந்த சுற்றுவட்டார பகுதிகளில் விசாரித்து வருகையில் தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மன் நடத்திய அத்துமீறல்களும் அதனை யாருக்காக நடத்தினார் என்ற அதிர்ச்சிகரமான உண்மையும் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த கள்ளதுப்பாக்கி எவ்வாறு வந்தது குறிப்பாக திருப்போரூர் போன்ற கிராமங்கள் சூழ்ந்துள்ள பகுதிக்கு ஏன் கள்ளதுப்பாக்கிகள் வந்துள்ளன என விசாரித்ததில், 'திருப்போரூர் வனப்பகுதி மான்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி இதனால் மான்களை வேட்டையாட அந்தப்பகுதியில் கள்ளதுப்பாக்கிகள் சட்ட விரோதமாக புழங்குகின்றன' என்ற தகவலும், தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மன் வாரநாட்களின் இறுதியில் தன் நண்பர்களுடன் அதிக வெளிச்சம் தரும் வண்டிகளில் கள்ளதுப்பாக்கியுடன் சென்று மான்களை வேட்டையாடுவதும், அந்த வேட்டையாடிய மானின் இறைச்சியை பிரபலங்களுக்கு குறிப்பாக தி.மு.க தலைவரின் மகன் உதயநிதி'க்கு குடுத்து வந்தாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனை அந்த ஊரை சேர்ந்த நபரும் முகம், பெயர் வெளியிட விரும்பாமல் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையின் குறிப்பாக உதயநிதியை வைத்து பதவிகளுக்கான சீட்டு வாங்குவதற்காக இது போன்ற செயல்களில் திருட்டுதனமாக செயல்பட்டு வந்த தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மன் நெடுகாலமாகவே செய்து வந்துள்ளார். ஆளும் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து, வயது வித்தியாசம் பாராமல் மூத்தவல்களையும் துட்சமென தூக்கி எரிந்து பேசும்வதும், தன்னை ராஜ குடும்பமாகவே நினைத்து இளவரசரை போல் துள்ளி திரிந்து வரும் உதயநிதி இதற்கு என்ன பதில் தரபோகிறார்?