Kathir News
Begin typing your search above and press return to search.

வேதாரண்ய தி.மு.க வில் ஏற்படபோகும் மாற்றம் - யாருக்கு சீட்டு என வரப்போகும் உட்கட்சி மோதல்.! #DMK #Vedharanyam #SKV #Pugalendhi

வேதாரண்ய தி.மு.க வில் ஏற்படபோகும் மாற்றம் - யாருக்கு சீட்டு என வரப்போகும் உட்கட்சி மோதல்.! #DMK #Vedharanyam #SKV #Pugalendhi

வேதாரண்ய தி.மு.க வில் ஏற்படபோகும் மாற்றம் - யாருக்கு சீட்டு என வரப்போகும் உட்கட்சி மோதல்.! #DMK #Vedharanyam #SKV #Pugalendhi

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 July 2020 8:18 AM GMT

வேதாரண்யம் தமிழக கடலோர தொகுதி ஒரு காலகட்டத்தில் பெரியாரிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியலில் இங்கு நுழைந்தவர்கள் ஏராளம். 5 கிலோ மீட்டர்களுக்கு ஒரு இடத்தில் பெரியார் சிலைகளையும், திராவிட கட்சி கொடிகளையும் பார்க்கலாம். உதயசூரியனையிம், கைகளில் இரட்டை இலை சின்னம் காட்டும் எம்.ஜி.ஆர் படங்களையும் வீடுகளில் வைத்திருப்பதை பெருமையாக கருதிய காலங்கள் உண்டு.

தேசிய கருத்துக்களும், மாநில அளவிலான அரசியல் சலசலப்புகளும் இங்கே ஏற்படுத்தும் தாக்கத்தை விட உள்ளூரில் இருக்கும் கட்சி பிரமுகர்களின் செல்வாக்கே இங்கு பேசப்படும்.

அந்த வகையில் இரு தினங்கள் முன்பு பா.ஜ.க'வில் இருந்து தி.மு.க'விற்க்கு சென்ற எஸ்.கே.வி என்று அழைக்கப்படுகின்ற எஸ்.கே.வேதரத்தினம் அவர்களின் வரவை தி.மு.க'வின் தலைவர் ஸ்டாலின் மகிழ்ச்சிகரமாக வெளியிட்டார், மேலும் இதுபற்றி ஊடகங்களிலும் இது பா.ஜ.க'விற்கு பின்னடைவு எனவும் தி.மு.க இதனால் பலம் பெரும் என்றம் செய்திகள் வெளிவந்தன.

ஆனால் நாம் விசாரித்த வகையில் இது தி.மு.க'வின் உட்கட்சி மோதலுக்கு ஆரம்ப புள்ளி என தகவல்கள் வருகின்றன்.

எஸ்.கே.வி அவர்களின் பலமே அவரிடம் உள்ள ஆதரவாளர்களின் எண்ணிக்கைதான் அந்த வகையில் சுமார் 21,000 ஓட்டுக்கள் அவரிடம் உள்ளன. அவரின் அரசியல் பயணமானது, 1996, 2001, 2006 ஆகிய மூன்று சட்டசபைத் தேர்தல்களிலும் தொடர்ந்து ஜெயித்தவர். மேலும் 12 வருடம் திமுக ஒன்றியச் செயலாளராக செயல்பட்டுள்ளார். 2011 தேர்தலில் தி.மு.க வேதை தொகுதியை பா.ம.க'விற்கு கொடுக்க அதனால் தனக்கு எம்.எல்.ஏ சீட் வாய்ப்பில்லாத கோபத்தால் சுயேட்சையாக போட்டியிட்டு 2 ம் இடம் பிடித்தார் இதனால் தி.மு.க தலைமையின் கோபத்திற்கு ஆளாகி நீக்கப்பட்டார். பின் 2015 ம் ஆண்டு பா.ஜ.க'வில் இணைந்தார்.பிரதமர் மோடி 3 இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்தார் தமிழகத்தில் அதில் முக்கியமானது வேதாரண்யம் தொகுதி அந்தளவிற்கு வேதரத்தினம் அவர்களுக்கு பா.ஜ.க'வில் முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது. இந்த நிலையில் இரு தினங்கள் முன்பு எவ்வித அறிவிப்பும் இன்றி வேதரத்தினம் அவர்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க'வில் இணைந்நது பா.ஜ.க மட்டுமல்ல தி.மு.க'வே எதிர்பார்க்காதது.

இந்த நிலையில் தான் அடுத்த சூறாவளியே ஆரம்பமாக போகிறது என்கின்றனர் வேதை பகுதி அரசியல் பிரமுகர்'கள். ஆம் தி.மு.க'வை சேர்ந்த புகழேந்தி'க்கு தான் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் சீட்டு என்பது பரவலாகவும், தி.மு.க தரப்பிலும் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்ட ஒன்று. அதே சமயத்தில் வேதரத்தினம் அவர்கள் பா.ஜ.க'வில் இருந்திருந்நால் அவர்தான் வேதை தொகுதியின் எம்.எல்.ஏ வேட்பாளர் இவை இரண்டுமே தற்பொழுது தி.மு.க'வை குழப்ப நிலையில் தள்ளியுள்ளன. காரணம் தனக்கு சீட்டு வழங்கப்படாததையும், பதவி போன்ற செயல்களில் கவுரவபடுத்தாதையும் காரணம் காட்டியே விலகும் குணம் கொண்டவர் வேதரத்தினம். அவர் தற்பொழுது 2021'ல் எம்.எல்.ஏ சீட்டை எதிர்பார்த்தே அங்கு ஐக்கியமாகியிருக்கிறார் என்று காரணம் கூறுகின்றனர் விஷயமறிந்தவர்கள்.

ஏனென்றால் 2021ன் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்வே பிரசாந்த் கிஷோர் பார்வையில் தான் முடிவு செய்யவேபடுகிறது. இதனால் அந்த தொகுதியில் செல்வாக்கான வேதரத்தினத்திற்கே முன்னுரிமை கிடைக்கும் என வேதரத்தினம் தரப்பு கணக்கு போட்டு தி.மு.க'வில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. ஆனால் தி.மு.க'வில் கடந்த காலங்களில் எதுவும் எதிர்பாராமல் கைக்காசை போட்டு செலவு செய்து 2021 தேர்தலில் எம்.எல்.ஏ சீட்டு கனவில் இருக்கும் புகழேந்தி அவர்களின் நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது. தற்பொழுது வேதரத்தினம் அவர்களை புகழேந்தி அலுவலகத்தில் வைத்துதான் கட்சியில் சேர்ந்து இருக்கிறார்கள் ஆனார் வேதரத்தினத்தின் வருகை புகழேந்தி அவர்களின் எம்.எல்.ஏ சீட்டு கனவையே ஆட்டம் காண வைத்து விடும் போலிருக்கிறதே?

கட்சியில் விலகாமல் கனவுடன் உழைத்த புகழேந்தியா அல்லது கோவித்துக்கொண்டு போய்விட்டு மீண்டும் வந்த வேதரத்தினமா யார் முக்கியம் என்பதை தி.மு.க தலைமை முடிவு செய்யட்டும்.

ஆனால் தி.மு.க'வில் இருந்து விலகி மீண்டு தி.மு.க வந்து சேர்ந்த மா.மீனாட்சிசுந்தரம் ஓரம்கட்டியே வைக்கப்பட்ட வரலாற்றை வேதரத்தினம் நன்கு அறிவார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News