Kathir News
Begin typing your search above and press return to search.

நகைக்கடையில் கைவரிசை காட்டிய தி.மு.க வார்டு செயலாளர் - தங்க செயினை லவட்டி கவரிங் செயினை வைத்தார்

நகை கடையில் கவரிங் செயினை வைத்து விட்டு தங்கச் செயினை திருடிய தி.மு.க வார்டு செயலாளர் வீடியோ இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.

நகைக்கடையில் கைவரிசை காட்டிய தி.மு.க வார்டு செயலாளர் - தங்க செயினை லவட்டி கவரிங் செயினை வைத்தார்

Mohan RajBy : Mohan Raj

  |  24 Aug 2022 1:59 PM GMT

நகை கடையில் கவரிங் செயினை வைத்து விட்டு தங்கச் செயினை திருடிய தி.மு.க வார்டு செயலாளர் வீடியோ இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருச்செந்தூரில் வாடிக்கையாளர் போன்ற நகைக்கடைக்கு வந்த திமுக வார்டு செயலாளர், கவரிங் நகை வைத்துவிட்டு தங்க நகையை திருடிய காட்சி சி.சி.டி.வி'யில் பதிவாகியுள்ளது.

நான்கு நாட்களுக்கு முன்பு வடக்கு ராதா வீதியில் உள்ள நகைக்கடைக்கு வந்த பெண்ணிடம் உரிமையாளர் தங்க நகைகளை காண்பித்துள்ளார்.

அப்போது ஒரு செயினை எடுத்து மேஜையில் வைத்த பின் வேறு நகையை காண்பிக்கும்படி கூறிய நிலையில் உரிமையாளர் உள்ளே சென்று நகைகளை எடுத்து வருவதற்குள் கவரிங் செயினை மாற்றி வைத்து தங்க செயினை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளார்.

விசாரணையில் அந்த பெண் அங்கமங்கலம் ஊராட்சி மன்ற எட்டாவது வார்டு செயலாளர்கள் பொற்கொடி என்பது தெரிய வந்துள்ளது.



Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News