காசோலை கொடுத்து ஏமாற்றியதாக வழக்கு: தி.மு.க மாநில மகளிர் அணி தலைவிக்கு ஓராண்டு சிறை தண்டனை !!
காசோலை கொடுத்து ஏமாற்றியதாக வழக்கு: தி.மு.க மாநில மகளிர் அணி தலைவிக்கு ஓராண்டு சிறை தண்டனை !!
By : Kathir Webdesk
கடந்த மூன்று ஆண்டுகளாக கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், செக் மோசடியில் ஈடுபட்டதாக, காஞ்சனா கமலநாதனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் மனுதாரர் 24 லட்ச ரூபாய் பணத்தை உடனடியாக திருப்பி வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
காஞ்சனா கமலநாதன் ஏற்கனவே செக் மோசடி வழக்கில் தண்டனை பெற்றுள்ள நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோசடி மேல் மோசடி செய்த வழக்கு: திமுக மாநில மகளிர் அணி தலைவிக்கு ஓராண்டு சிறை தண்டனை !!
காசோலை மோசடி வழக்கில் தி.மு.க மாநில மகளிர் அணித் தலைவியும் முன்னாள் எம்.எல்.ஏவுமான காஞ்சனா கமலநாதனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காஞ்சனா கமலநாதன், கடந்த 2016 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரியை சேர்ந்த தேவி என்பவருக்கு, 24 லட்சம் ரூபாய்க்கான காசோலை கொடுத்துள்ளார். ஆனால், வங்கியில் பணம் இல்லை என காசோலை திரும்பியது. இதையடுத்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில், 2016ம் ஆண்டு காஞ்சனா கமலநாதன் மீது தேவி வழக்கு தொடர்ந்தார்.