Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்மீக பேச்சாளரை கேடயமாக்கிய தி.மு.க.! #DMK

ஆன்மீக பேச்சாளரை கேடயமாக்கிய தி.மு.க.! #DMK

ஆன்மீக பேச்சாளரை கேடயமாக்கிய தி.மு.க.! #DMK

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Jun 2020 2:20 AM GMT

ஆன்மீக பேச்சாளர் மங்கையர்கரசியின் சமீபத்திய மேடைப்பேச்சு விவாத பொருளாகியுள்ளது, அதிலும் கடவுள் மறுப்பையே குறிப்பாக இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் நோக்கமே பிரதானமாகிய திராவிட கழக சுப.வீரபாண்டியனை மேடையில் வைத்துக்கொண்டு கலைஞர்.கருணாநிதி'யின் 97வது பிறந்நநாள் வாழ்த்து என்ற பெயரில் கிட்டதட்ட திமுக'வின் கேடயமாக முழங்கியிருக்கிறார் மங்கையர்க்கரசி.

அவர் பேசியதில் இருந்து,

1) ஆன்மீக பேச்சாளர் என்ற அறிமுகம் செய்துகொண்டு கலைஞரின் புகழ் பாட ஆரமித்தது,

2) பட்டினத்தார், காரைக்கால் அம்மையார் என இந்து மத முன்னோடிகளுடன் கலைஞரை ஒப்பிட்டு பேசியது, குறிப்பாக இவர்கள் போல கலைஞர் வாழ்ந்தார் என்பது.

3) திமுக துவக்கமே கலைஞர் என்றும் அதனை உருவாக்கிய அண்ணா போன்ற தலைவர்களை மறந்து கூறியது,

4) திருக்குறளை ஒப்பீடு செய்து கலைஞரை தமிழ் பாதுகாவலர் என்றும், தமிழை கற்று தந்தவர் என்றும் பரப்புரை செய்தது,

5) ஸ்டாலின் அவர்களின் மிசா கைது பற்றிய சந்தேகங்களும், சர்ச்சைகளும் உலவி வரும் நிலையில் அவர் வீரபாண்டிய கட்டபொம்மன், பகத்சிங் போன்று சிறை வாசம் அனுபவித்தவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றது,

போன்ற மேற்கூரிய விஷயங்களை ஒரு ஆன்மீக பேச்சாளர் என்று இதுவரை அடையாளம் காணப்படவரை வைத்து பரப்புரை செய்தது விவாதம் ஆகியுள்ளது, மேலும் இதில் அப்பட்டமாக இந்து மதத்தை பற்றி அவதூறு செய்வது, பண்டிகை காலங்களில் வாழ்த்து சொல்ல கூட மனமில்லால் இருப்பது, கூட்டணி கட்சி தலைவர்கள் இந்து மதத்தை கேலி செய்வதை ஊக்குவிக்கும் விதமாக கண்டும் காணாமல் இருப்பது போன்ற விஷயங்களை இதுவரை வெளிப்படையாகவே செய்து வந்த திமுக இன்றைய காலகட்ட அரசியலில் ஆன்மீகம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது எனவும், இந்துக்கள் விழிப்புணர்வு மேலோங்கி இருக்கும் இந்த காலகட்டங்களில் சுப.வீ, வீரமணி போன்ற திராவிட பொய் பரப்புரைகள் எடுபடாமல் உப்புசப்பில்லாமல் போனதால் ஆன்மீக பேச்சாளரை அழைத்து வந்து தன் கட்சியின் அவப்பெயர்களாக எவை எல்லாம் மக்களிடத்தில் உலாவுகின்றனவோ அவை அனைத்தையும் பாரட்டுகிறேன் என்ற பெயரில் அதுவும் ஆன்மீக பேச்சாளராகிய ஒரு பெண்ணை வைத்து பரப்புரை செய்வதை எல்லாம் வைத்து பார்க்கும் போது இனி இந்து மதம் மற்றும் ஆன்மீகமே நம் எதிர்கால அரசியலை நிர்ணயிக்கும் முக்கிய காரணி என்பதை உணர்ந்து திமுக எடுத்த கேடயமாகவே தெரிகிறது என்கிறார் அரசியலில் நீண்ட அனுபவம் உள்ள ஒருவர்.இறுதியாக அந்த நிகழ்ச்சியில் மங்கையர்க்கரசி ஒரு உதாரண கதை சொல்லுவார் அதில், "மான்குட்டியை தொலைத்த ஒருவன் கடவுளிடம் தன் மான்குட்டி தொலைய காரணமானவனை காட்டு என்று கேட்பதாகவும் உடனே கடவுள் அவன் பின் சிங்கத்தையே நிற்க வைத்து இப்பொழுது உன் பிரச்சனையை நீயே பார்த்துகொள் என்பது போலவும்" கூறினார். தெரிந்தோ தெரியாமலோ உடன்பிறப்புகளின் இன்றைய நிலையை அவர் இந்த கதை மூலம் உணர்த்திவிட்டார் "திமுக போன்ற மான்குட்டியாகிய கட்சியை காணாமல் செய்த காரணத்தை கேட்கும் போது கலைஞரின் குடும்பம் எனும் சிங்கத்தை உடன்பிறப்புகளின் பின் நிற்க வைத்து அந்த கடவுள் சிரிப்பது போல் அற்புதமாக அமைந்தது உதாரண கதை. எது எப்படியோ இந்து மதம் மற்றும் ஆன்மீகமே நமக்கு ஆபத்து என திமுக உணர்ந்துவிட்டதாகவே தெரிகிறது என்றார் ஓர் ஆன்மீகவாதி

Next Story
கதிர் தொகுப்பு
Trending News