Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க சின்னமான உதய சூரியன் எப்படி கிடைத்தது? புரட்சியாளரை சுரண்டிய மறைக்கப்பட்ட வரலாறு! #DMK

தி.மு.க சின்னமான உதய சூரியன் எப்படி கிடைத்தது? புரட்சியாளரை சுரண்டிய மறைக்கப்பட்ட வரலாறு! #DMK

தி.மு.க சின்னமான உதய சூரியன் எப்படி கிடைத்தது? புரட்சியாளரை  சுரண்டிய மறைக்கப்பட்ட வரலாறு! #DMK
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Jun 2020 6:14 PM IST

இந்தியாவில் தேர்தல் சின்னங்களின் வரலாற்றை அறிந்து கொள்வது முக்கியம், ஏனென்றால் இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் சின்னத்தின் அடிப்படையில் வாக்களிக்கின்றனர். சில சின்னங்கள் மக்களின் மனதில் அழுத்தமாக பதிந்து அதன் கட்சித் தொண்டர்களிடையேயே விசுவாசத்தை எதிர்பார்க்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே தன் சொந்த சின்னத்தை தக்க வைத்திருக்க முடிந்த அரசியல் கட்சிகளில் ஒன்று திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க). அதன் சின்னம் உதய சூரியன், தமிழக மக்கள் மத்தியில் அதன் கட்டுப்பாட்டை இன்னும் வைத்திருக்கிறது. நாகூர் ஹனிபா எழுதிய மற்றும் பாடிய, 'ஓடி வருகிறான் உதய சூரியன்' அதன் பேரணிகளில் இன்னும் பிரச்சாரப் பாடலாக உள்ளது. இந்த சின்னம் தமிழக அரசியலை மட்டும் வடிவமைக்கவில்லை, தேசிய அரங்கிலும் தனது பங்கைக் கொண்டுள்ளது. எனவே, திராவிட அரசியலின் சகாப்தத்தில் தோன்றிய இந்த சின்னத்தை திமுக கட்சி எவ்வாறு பெற்றது மற்றும் உலகின் மிக சக்திவாய்ந்த குடும்பங்களில் ஒன்றை இது எவ்வாறு வரையறுக்கிறது?

நமக்குத் தெரிந்த கதை

1948-ஆம் ஆண்டில், எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியார் தலைமையில் "வன்னியர் குல க்ஷத்ரியர் கட்சி" என்ற ஒரு கட்சி இருந்தது, அதன் செயலாளராக கோவிந்தசாமி படையாச்சியார் இருந்தார். இந்த கட்சிக்கு உதய சூரியனின் சின்னம் இருந்தது. 1951 ஆம் ஆண்டில், வன்னியர்களை ஒரு அரசியல் சக்தியாக ஒழுங்கமைக்க வன்னியர்கள் ஒரு பெரிய மாநாட்டைக் கூட்டினர். "உழைக்கும் மக்களுடன்" ஒற்றுமையுடன் இணைந்து வன்னியர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று மாநாடு தீர்மானித்தது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு டாய்லர்ஸ் கட்சி (TNTP) 1951 ஆம் ஆண்டில் ராமசாமி படையாச்சியார் அவர்களால் நிறுவப்பட்டது.

1952-இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் மெட்ராஸ் சட்டமன்றத்தில் TNTP 19 இடங்களை வென்றது. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) மெட்ராஸ் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, அவருக்கு பதிலாக காமராஜ் நியமிக்கப்பட்டபோது, ​​TNTP தனது ஆதரவை வழங்க முடிவு செய்து, ராமசாமி படையாச்சி காமராஜின் அமைச்சரவையில் உறுப்பினரானார். பின்னர், TNTP கலைக்கப்பட்டது.

கோவிந்தசாமி படையாச்சியார் வெளியே வந்து தொழிலாளர் கட்சி என்று தனது சொந்த அமைப்பைத் தொடங்கினார். தொழிலாளர் கட்சி அதன் சொந்த அடையாளத்தைப் பெற சி.அண்ணாதுரை வலியுறுத்தினார். தொழிலாளர் கட்சி பெற்ற சின்னம் தான் உதய சூரியன்.

1956-ஆம் ஆண்டில் திமுகவால் நடத்தப்பட்ட பேரணியில், திமுக 1957 தேர்தலில் போட்டியிடும் என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த நேரத்தில், தொழிலாளர் கட்சியின் உதய சூரியன் சின்னத்தை தி.மு.க-விற்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் அண்ணாதுரை கோரினார். கோவிந்தசாமி படையாச்சியார் தனது தொழிலாளர் கட்சியைக் கலைத்து, தி.மு.க-வுடன் இணைத்து விட்டதாகவும், கோவிந்தசாமியின் கட்சி உறுப்பினர்கள் தி.மு.க-வின் ஆதரவைப் பயன்படுத்தி வென்றதாகவும் வாதாடி உதய சூரியன் சின்னத்தைப் பெற்றார். அப்போதிருந்து, இன்று வரை, ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக திமுக, தனது அடையாளமாக 'உதய சூரியனை' கொண்டுள்ளது.

எம்.ஜி. ராமச்சந்திரன் 1972-ஆம் ஆண்டில் திமுகவிலிருந்து பிரிந்து அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) உருவாக்கிய போதும், வைகோ தனது சொந்த கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) உருவாக்க 1994-ல் பிரிந்தபோதும் உதயசூரியன் சின்னத்திற்கு பிரச்சினை ஏற்படும் போல் இருந்தது. வைகோ அதை தனது புதுக் கட்சியின் அடையாளமாகப் பெறப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது அவர் உதய சூரிய சின்னம் அண்ணாவால் உயிர்ப்பிக்கப்பட்டதாகவும், அது அவரது 'பாட்டன்' அண்ணாவின் சொத்து என்றும், அதில் அவருக்கும் உரிமை உண்டு என்றும் கருணாநிதி அதை தனது சொந்த சொத்தாக உரிமை கோர முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் வைகோ, அந்த சின்னத்தை கோருவதற்கு போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியவில்லை.

உதய சூரியன் சின்னத்தை திமுக எவ்வாறு சொந்தமாக வைத்திருக்க முடிந்தது என்பதற்கான அறியப்பட்ட கதை இது. ஆனால் சின்னத்தின் பின்னால் பலருக்குத் தெரியாத ஒரு மறைக்கப்பட்ட வரலாறு உள்ளது. தமிழ்நாடு இதுவரை கண்டிராத மிகப் பெரிய புரட்சியாளர்களில் ஒருவரால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை ஒரு கட்சி எவ்வாறு சுரண்டியது என்பதற்கான வரலாறு.

மறைக்கப்பட்ட வரலாறு

1929-ஆம் ஆண்டில், சுயமரியாதை இயக்கத்தின் பேரணி செங்கல்பட்டில் நடந்தது. பேரணிக்காக, நான்கு தலைவர்களின் படங்களுடன் சூரியன் நான்கு கதிர்களை வெளியேற்றும் ஒரு கொடி வடிவமைக்கப்பட்டது - தியாகராய செட்டி, T.M .நாயர், பனகல் அரசர், மற்றும் E.V ராமசாமி. இந்த கொடியை செங்கல்பட்டில் பேரணிக்கு தலைமை தாங்கிய தாத்தா ரெட்டமலை சீனிவாசன் வடிவமைத்தார்.


பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1939-இல், தாத்தா ரெட்டமலை சீனிவாசன் டாக்டர் அம்பேத்கரின் ஆதரவுடன் ''மெட்ராஸ் மாகாண பட்டியல் சாதியினர் கூட்டமைப்பைத்'' தொடங்கினார். இந்த கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியின் வடிவத்தை எடுத்தது, இது பிரபலமாகவும், பேச்சுவழக்காகவும் "சூரியக் கட்சி" என்று அழைக்கப்பட்டது, ஏனெனில் கட்சியின் கொடியில் சூரியன் இருந்தது. வேலூருக்கு அருகிலுள்ள குடியாத்தத்தில் இருந்து வெளியிடப்பட்ட மெட்ராஸ் மாகாண பட்டியல் சாதி கூட்டமைப்பிற்கான ஒரு பத்திரிகை முதன்முறையாக இரண்டு மலைகளிலிருந்து எழும் சூரியனின் சின்னத்தைப் பிரசுரித்தது. (தமிழில் ரெட்டமலை என்றால் 2 மலைகள்).

இப்போது இது திமுகவை இழிவுபடுத்தும் கதையாக புறக்கணிக்கப்படலாம். ஆனால், இங்கு வெளியிடப்பட்ட உண்மையை தாத்தா ரெட்டமலை சீனிவாசனின் பேத்தி டாக்டர் டாக்டர் நிர்மலா அவர்களே ஆவணப்படுத்தியுள்ளார்.

ரெட்டமலை சீனிவாசனின் வரலாறும், தலித்துகளின் விடுதலையில் அவர் செய்த பங்களிப்பும் ஓரங்கட்டப்பட்டு, பிரதான அரசியலில் இடம் கிடைக்கவில்லை. பறையர் சாதியில் பிறந்த இவர் காந்தி மற்றும் அம்பேத்கர் இருவரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். அவர் தமிழ்நாட்டில் "பட்டியல் சாதி" இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் மற்றொரு முக்கிய சாதி எதிர்ப்புத் தலைவரான அயோத்தி தாஸின் மைத்துனர் ஆவார். இவர் தென்னாப்பிரிக்க நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார், அங்கு காந்தி ஒரு வழக்கறிஞராக பணியாற்றினார். அவர்தான் காந்திக்கு தமிழில் அவர் பெயரை எழுதக்கற்றுக் கொடுத்தார்.

அவர் பறையர் மகாஜன சபையை நிறுவினார் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கருடன் லண்டனில் நடைபெற்ற முதல் இரண்டு வட்ட மேஜை மாநாடுகளில் பறையர்களை பிரதிநிதித்துவப்படுத்தினார்.


நவம்பர் 1932-இல் மெட்ராஸ் சட்டமன்றத்தில் ''கோயில் நுழைவு குறைபாடுகள் மசோதா'' அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​ரெட்டமலை சீனிவாசன் அதை குறைவான நடவடிக்கை என்று விமர்சித்து , "கடவுள் கோயிலுக்குள் இருக்கிறாரோ இல்லையோ, ஆனால் நான் இந்த மண்ணின் மைந்தன். நிலம் அல்லது கடல், சாலை அல்லது கோயில் எங்கு வேண்டுமானாலும் செல்வது என் பிறப்பு உரிமை அல்லது சிவில் உரிமை'' என்றார். அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாற முடிவு செய்தபோது, ​​அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஒரு அறிக்கையை வெளியிட்டார். இருப்பினும், அம்பேத்கரைப் போலவே, அவரும் காந்தியின் அணுகுமுறை தலித்துகளின் மேம்பாட்டிற்கு வழிவகுக்காது என்று நம்பினார், ஆனால் கோவில் நுழைவுக்கு ஆதரவான சட்டங்கள் நிச்சயமாக தலித்துகளின் முன்னேற்றத்திற்கு உதவும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.


உதய சூரியன் சின்னத்தின் உண்மையான படைப்பாளரும், உரிமையாளரும் வேறு யாருமல்ல, ஃபயர்பிரான்ட் தலித் தலைவர் தாத்தா ரெட்டமலை சீனிவாசன். ஆனால் சமூக நீதி குறித்து மற்றவர்களுக்கு சொற்பொழிவு செய்யும் திமுக ஒருபோதும் ரெட்டமலை சீனிவாசனையும் தமிழகத்தில் தலித்துகளின் முன்னேற்றத்திற்கு அவர் செய்த பங்களிப்பையும் ஒப்புக் கொள்ளவில்லை.

Author : S.Kaushik (Communemag)

Next Story
கதிர் தொகுப்பு
Trending News