லட்சக்கணக்கில் பணக்கட்டுகளை வைத்து சூதாடிய தி.மு.க கவுன்சிலர் - ஊரடங்கிலும் அடங்காத புதுக்கோட்டை தி.மு.க! #DMK
லட்சக்கணக்கில் பணக்கட்டுகளை வைத்து சூதாடிய தி.மு.க கவுன்சிலர் - ஊரடங்கிலும் அடங்காத புதுக்கோட்டை தி.மு.க! #DMK

புதுக்கோட்டை மாவட்டம் சிறுகடவாக்கோட்டை பொன்னமங்கலம் பகுதியில் தி.மு.கவை சேர்ந்த பொன்பேத்தி சுந்தரபாண்டியனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சட்டவிரோதமாக லட்சக்கணக்கில் பணத்தை பணயமாக வைத்து சூதாடுவதாக தகவல் போலீசாருக்கு கிடைத்ததை அடுத்து அங்கு மீமிசல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் காவல் படையினர் விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் தி.மு.க பொன்பேத்தி சுந்தரபாண்டியன் தலைமையில் அங்கு சூதாடிய அனைவரும் தப்பி செல்ல முயன்றனர்.
இருதரப்புக்கும் நடந்த போராட்டத்தில் இறுதியாக போலீசார் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் பொன்பேத்தி சுந்தரபாண்டியன் மற்றும் அங்கு சூதாடிய 15 பேரை கைது செய்தது மட்டுமல்லாமல் சுமார் 13 லட்சம் மதிப்புள்ள பணத்தை கட்டு கட்டாக போலீசார் அங்கிருந்து அள்ளி சென்றனர். கொரோனோ ஊரடங்கில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக கடன் வாங்கி விவசாயம் செய்யும் நிலையில் லட்சக்கணக்கில் பணத்தை வைத்து சூதாடிய தி.மு.க பொன்பேத்தி சுந்தரபாண்டியனை அந்த பணம் எங்கிருந்து வந்தது என போலீசார் விசாரித்து வருகின்றனர்.