Kathir News
Begin typing your search above and press return to search.

பொதுமக்கள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் எது என்பதை பொதுமக்கள் நடந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை தெரிந்து கொள்ள வேண்டுமா?
X

KarthigaBy : Karthiga

  |  3 May 2023 7:15 AM GMT

ஆதார் அடையாள அட்டையானது பல்வேறு அரசு நலத்திட்டங்கள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு முக்கிய அடையாள ஆவணமாக விளங்குகிறது . ஆதார் அட்டையில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ள ஓ.டி.பி என்னும் ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் பயன்பாட்டில் உள்ளது . ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களுக்கு இந்த ஓ.டி.பி தகவல் வரும் .


பொதுமக்களில் பலர் பல்வேறு சிம்கார்டுகளை பயன்படுத்துவதாலும் சில வேலைகளில் ஆதார் இணைத்த செல்போன் எண்ணை பயன்படுத்தாமல் விட்டு விட்டதாலும் ஒ.டி.பி தகவல் எங்கு செல்லுமோ என்ற கலக்கத்தில் இருப்பது உண்டு. இதற்கு தற்போது தீர்வு காணும் விதமாக ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-


பொதுமக்களில் பலர் தங்களது மொபைல் எண்களில் எந்த எண்ணெ ஆதாருடன் இணைத்தோம் என்பதை அறியாமல் இருப்பதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு தகவல்கள் வந்துள்ளன .மொபைல் எண் பற்றி உறுதியாக தெரியாததால் ஆதார் தொடர்பான ஓ.டி.பி எந்த எண்ணுக்கு செல்லுமோ என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படுகிறது. இதனை களைய மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் விவரங்களை ஆதாருடன் சரி பார்க்க அடையாள ஆணையம் அனுமதி அளித்துள்ளது.https://myaadhar.uidai.gov.in/ என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது மை ஆதார் என்கிற செயலி மூலம் மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை சரிபார்க்கவும் என்ற குறியீட்டின் கீழ் இந்த வசதியை பெறலாம். குறிப்பிட்ட மொபைல் எண் இணைக்கப்படாத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது தெரியவரும் .அவர்கள் விரும்பினால் மொபைல் என்னை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் .


மொபைல் எண் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டு இருந்தால் "நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண் ஏற்கனவே எங்கள் பதிவுகளுடன் சரிபார்க்கப்பட்டது" என்ற செய்தி கிடைக்கும். மொபைல் எண் நினைவில் இல்லை என்றால் பதிவு செய்யும்போது கொடுத்த மொபைலின் கடைசி மூன்று இலக்கங்களை மை ஆதார் இணையதளம் அல்லது செயலியில் "சரிபார்க்க" என்ற குறியீட்டில் பார்க்கலாம். மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை ஆதார் கார்டு இணைக்க விரும்பினால் அல்லது புதுப்பிக்க விரும்பினால் அருகில் உள்ள ஆதார் மையத்துக்கு செல்ல வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News