Kathir News
Begin typing your search above and press return to search.

அரசியல்வாதியும் இல்லை ஆர்வலரும் இல்லை ஆனால் படுகொலை செய்யப்பட்டார் : சந்யாசிகளுக்கு வாழ உரிமை இல்லையா?

அரசியல்வாதியும் இல்லை ஆர்வலரும் இல்லை ஆனால் படுகொலை செய்யப்பட்டார் : சந்யாசிகளுக்கு வாழ உரிமை இல்லையா?

அரசியல்வாதியும் இல்லை ஆர்வலரும் இல்லை ஆனால் படுகொலை செய்யப்பட்டார் : சந்யாசிகளுக்கு வாழ உரிமை இல்லையா?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Sept 2019 10:14 AM IST


பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சிஷ்யரான சுவாமி தத்வபோதானந்தா அவர்கள், புதுச்சேரியில் உள்ள தனது குடியிருப்பில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நள்ளிரவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சுவாமி தத்வபோதானந்தாவுக்கு பிப்ரவரி 4, 1999 அன்று பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி சன்யாஸம் வழங்கினார்.



கொடூர கொலை



மாலைமலர் செய்திகளின் படி, ஸ்வாமி தத்வபோதானந்தா அவர்கள் புதுச்சேரியில் உள்ள மொட்டத்தோப்பு அண்ணாமலை நகரில் உள்ள கோகுலம் குடியிருப்பில் வசித்து வந்தார். 5 மாடி குடியிருப்பில் 13 வீடுகள் உள்ளன. ஸ்வாமி தத்வபோதானந்தா (60 வயது), இந்த குடியிருப்பில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு ஆறுமுகம் காவலராக வேலை செய்து கொண்டிருக்கிறார். ஆகஸ்ட் 28 ஆம் தேதி இரவு, அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் குடியிருப்பிற்கு வந்தனர். அவர்கள் காவலரைத் தாக்கி, அங்கிருந்து ஓடிப்போகும் படி மிரட்டியுள்ளனர். பயந்துபோன காவலர், தனது கடமையைச் செய்யாமல் ஓடிவிட்டார்.


பின்னர் அந்த இளைஞர்கள் வாகன நிறுத்துமிடத்தில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தனர். வெளியே சென்றிருந்த பாதுகாப்பு காவலர் ஆறுமுகம் அதிகாலை 3 மணியளவில் அங்கு திரும்பி தனது பணியைத் தொடர்ந்தார்.


ஸ்வாமி தத்வபோதானந்தா தினமும் காலையில் சீக்கிரமே எழுந்திருப்பது வழக்கம். ஆனால் அவர் ஆகஸ்ட் 29, 2019 அன்று காலை 10 மணி வரை எழுந்திருக்கவில்லை. மேலும் அவருக்காக கொண்டு வரப்பட்ட பால் பாக்கெட் எடுக்கப்படாமல் இருந்தது. எனவே, சந்தேகத்தில் காவலர் ஆறுமுகம் கதவைத் தட்டினார். கதவு திறக்கப்படவில்லை.


இது குறித்து கோரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், திருமுகுகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கதவு பூட்டப்பட்டிருந்தது. அவர்கள் அதை உடைத்து உள்ளே சென்றார்கள். அவரது வீட்டின் இரண்டு அறைகளுக்கு இடையில் ஸ்வாமி தத்வபோதானந்தா கொலை செய்யப்பட்டு காணப்பட்டார். அவர் தலையிலும் உடலிலும் காயங்கள் இருந்தன. குடிபோதையில் இருந்த ரவுடிகள் ஸ்வாமிகளின் வீட்டிற்குள் நுழைந்து அவரைக் கொன்றுவிட்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.



கைது



தந்தி டிவி வெளியிட்ட செய்திகளின்படி, கோரிமேடு போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த விக்கி மற்றும் சிவாவை கைது செய்தனர். இருவருமே அந்த குடியிருப்புக்கு அருகில் போதைப்பொருள் பருகி வந்ததாக கூறப்படுகிறது. இதை பலமுறை கண்டித்ததுள்ள ஸ்வாமி தத்வபோதானந்தாவும் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். காவல்துறையினர் சிவா மற்றும் விக்கியிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்று, அவர்களின் இரத்தக் கறை படிந்த ஆடைகளையும் பறிமுதல் செய்தனர்.



பேசப்படாத படுகொலை



இந்த கொடூரமான கொலை பற்றிய தகவல்கள் சில நாளிதழ்களில் இடம்பெற்று இருந்தாலும், பிரதான தமிழ் ஊடகங்களும் தேசிய ஊடகங்களும் இந்த செய்தியை சுலபமாக புறக்கணித்தன. இன்றைய ஊடகங்கள் கொலைகள் மற்றும் தற்கொலைகள் பற்றி அதிகம் விவாதிக்கின்றன. ஆனால் பேசப்படாத இந்த குறிப்பிட்ட செய்தி மட்டும் பல சந்தேங்களை எழுப்புகிறது. தமிழ் ஊடகங்கள், குறிப்பாக கொலைகள், தற்கொலைகள் மற்றும் போக்குவரத்துக் கொலைகள் குறித்து அதிகமாக குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் ஸ்வாமி தத்வபோதானந்தாவின் கொடூரமான கொலை மட்டும் மூடி மறைக்கப்பட்டுள்ளது.



அரசியல்வாதியும் இல்லை ஆர்வலரும் இல்லை



ஸ்வாமி தத்வபோதானந்தா, வேதங்களை பயிற்றுவிக்கும் குருவாகவும் மற்றும் ஆன்மீக பேச்சாளராகவும் இருந்து வந்தார். ஆனால் அவர் ஒரு அரசியல்வாதியோ, சமூக ஆர்வலரோ இல்லை. அவருக்கு எந்தவொரு அரசியல் தொடர்பும் இல்லை. எந்தவொரு சமூக அல்லது அரசியல் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்ததாக தெரியவில்லை. சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஸ்வாமிகள், தனது பகுதியில் உள்ள இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை கண்டித்துள்ளார். அவர் படுகொலை செய்யப்பட்டதற்கு இது தான் ஒரே காரணமா என்ற சந்தேகம் எழுந்தாலும், இந்த கொலை குறித்து ஊடகங்களின் முழு மெளனம், இந்த சந்தேகத்தை பலப்படுத்துகிறது.



சந்யாசிகளுக்கு வாழ்வதற்கு உரிமை இல்லையா?



வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு பாரத தேசத்தில் கருத்துச் சுதந்திரம் மிக அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்த கருத்து சுதந்திரம் இந்தியாவில் குறிப்பிட்ட சமூகங்கள் மட்டுமே சக்தி வாய்ந்தது என்ற கட்டுக்கதையை எப்போதுமே பரப்பி வருகிறது. ஆனால் உண்மை இதற்கு நேர்மாறாக தான் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் உயிருக்கும் குரல் கொடுக்க வேண்டிய அனைத்து குரல்களையும் கைப்பற்றிய அமைப்புகள் இந்த படுகொலையை மட்டும் வசதியாக புறக்கணித்தது. இங்கு அமைப்புகள் என்று கூறப்படுவது ஊடகங்கள் துவங்கி நீதித்துறை வரையிலான நிறுவனங்கள். ஒரு சந்யாசி தனது குடியிருப்பில் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் பலருக்கு குருவாகவும் மற்றும் வழிகாட்டியாகவும் இருந்து வந்துள்ளார். ஆனால் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பின்பு ஒட்டுமொத்த சமூகமும் அமைதியாக இருக்கிறது! ஒரு சமூக உணர்வுள்ள சந்யாசியாக வாழ்ந்தால் என்ன தவறு? சந்யாசிகளுக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லையா?


குறிப்பு : இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரையே சேரும். கதிர் செய்திகள் இந்த கருத்துகளுக்கு பொறுப்பேற்காது.


(The article is translated from TheLightofEast)


Next Story
கதிர் தொகுப்பு
Trending News