Kathir News
Begin typing your search above and press return to search.

டீடாக்ஸ் வாட்டர் பற்றி உங்களுக்கு தெரியுமா? அட அதில் இவ்வளவு நன்மைகளா?

டீடாக்ஸ் வாட்டர் என்றால் என்ன என்பது பற்றியும் அதனை பருவதால் உடலுக்கு ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றியும் காண்போம்.

டீடாக்ஸ் வாட்டர் பற்றி உங்களுக்கு தெரியுமா? அட அதில் இவ்வளவு நன்மைகளா?

KarthigaBy : Karthiga

  |  26 Oct 2023 4:15 PM GMT

சாதாரணமாக அடிக்கடி நாம் தண்ணீர் அருந்துவது உடல் நலத்திற்கு நல்லது என்பது நமக்கு நன்கு தெரியும். ஆனால் நாம் அனைவரும் ஒரு நாளைக்கு தேவையான தண்ணீரை முழுமையாக எடுத்துக் கொள்வதில்லை. தண்ணீர் இல்லாமல் சுவையற்று இருப்பதனால் அதிகம் குடிக்க பலரும் விரும்புவதில்லை. ஆனால் டீடாக்ஸ் வாட்டர் என்பது பலவகையான பழங்கள் காய்கறிகள் மூலிகைகள் ஆகியவை கலந்த மணமும் சுவையும் கூடிய ஒரு குடிநீராகும்.


இதை தயார் செய்வதும் மிகவும் எளிமைதான். டீடாக்ஸ் வாட்டர் தயார் செய்வதற்கு தேவையான பழங்களையும், காய்கறிகளையும் மணமுள்ள மூலிகைகளையும், ஏலக்காய், இலவங்கம், எலுமிச்சை இஞ்சி, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து கொண்டு அவற்றை நறுக்கி தண்ணீரோடு கலந்து ஊற வைக்க வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் குறைந்தது 8 மணி நேரமாவது ஊற வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்கள் சுவை,மணம் அனைத்தும் அந்த நீரில் இறங்கி குடிப்பதற்கு மிகுந்த சுவையையும் நமக்கு புத்துணர்வையும் தரும்.


தொப்பை குறையும். காய்கறிகள் பழங்கள், ஆகியவற்றில் உள்ள சத்துக்கள் உடலுக்கு சேரும். அடிக்கடி இந்த நீர் பருகுவதினால் பசி எடுப்பது குறையும். இதனால் நொறுக்கு தீணிகளை அதிகம் விரும்ப மாட்டோம் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு இல்லை. செரிமான கோளாறுகளை நீக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. சாதாரண தண்ணீர் குடிக்க பிடிக்காதவர்கள் கூட இந்த தண்ணீர் மிகுந்த சுவையோடு இருப்பதால் இதனை பருக அதிகம் விரும்புவார்கள். எனவே உடலில் நீர் சத்து குறையாமல் பாதுகாக்கிறது.


SOURCE :kalkionline.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News