Begin typing your search above and press return to search.
கோடையிலும் குவிந்த கொடை ! சென்ற மாதம் வசூலான ஜி.எஸ்.டி வரி வசூல் எவ்வளவு தெரியுமா?
கோடையிலும் குவிந்த கொடை ! சென்ற மாதம் வசூலான ஜி.எஸ்.டி வரி வசூல் எவ்வளவு தெரியுமா?
By : Kathir Webdesk
மே மாதத்திற்கான ஜி.எஸ்.டி வரி வசூல் ஒரு லட்சத்து 289 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசுக்கான ஜி.எஸ்.டி 17 ஆயிரத்து 811 கோடி ரூபாயும்,மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி 24 ஆயிரத்து 462 கோடி ரூபாயும் வசூலாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி மூலம், 49 ஆயிரத்து 891 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாகத் கூறப்பட்டிருக்கிறது. செஸ் வரி மூலம், 8ஆயிரத்து 125 கோடி ரூபாய் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் மே மாதத்தில் மட்டும், ஒரு லட்சத்து 289 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி வரி வசூலாகியிருப்பதாகத் கூறப்பட்டிருக்கிறது.
Next Story