Kathir News
Begin typing your search above and press return to search.

வருமான வரி கூடுதலாக செலுத்தியிருந்தால் இனி எத்தனை நாட்களில் 'ரீபண்ட்' என்று தெரியுமா?

கூடுதலாக வருமான வரி செலுத்தி இருந்தால் ரீபண்ட் அளிப்பதற்கான கால அவகாசம் 16 நாளாக குறைக்கப்பட்டுள்ளது என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரி கூடுதலாக செலுத்தியிருந்தால் இனி எத்தனை நாட்களில் ரீபண்ட் என்று தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  3 Jun 2023 11:15 AM GMT

வருமானவரித்துறை சார்பில் ஆன்லைனில் நடந்த 'சம்வாத்' அமர்வில் சி.பி.டி.டி என்று அழைக்கப்படுகிற மதிய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்:-


வருமானவரி கணக்குகளை பெற்று அவற்றை சரி பார்க்கும் பணி விரிவாக்கப்பட்டுள்ளது. வருமான வரி கூடுதலாக செலுத்தியிருந்தால் அவற்றை திரும்ப செலுத்துவதற்கான அவகாசம் கடந்த 2021 - 22 ஆம் ஆண்டில் 26 நாட்களாக இருந்தது .அது 2022-23 ஆம் ஆண்டில் 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்த நாளிலேயே அது தொடர்பான செயல்முறைகளை செய்து முடிப்பது 100 சதவீதம் அதிகரித்துள்ளது.


2021 - 2022 ஆம் ஆண்டில் இது 21% ஆக இருந்தது. 2022- 2023-ஆம் நிதி ஆண்டில் இது 42 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28- ஆம் தேதி அன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 22 லட்சத்து 94 ஆயிரம் கணக்குகளின் செயல்முறைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மார்ச் 31- ஆம் தேதி 24 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கல் ஆகின.


ரூபாய் 2480 கோடி கூடுதல் வரியாக வசூல் ஆகியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இறுதியில் லட்சத்துக்கு அதிகமான முகமற்ற மதிப்பீடுகள் நிறைவடைந்துள்ளன. 2021- 22ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-23 - ஆம் நிதி ஆண்டில் முகமற்ற மதிப்பீடுகள் தொடர்பான குறைபாடுகள் 60% குறைந்துள்ளது . முகமற்ற மதிப்பீடுகள் வழியாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மேல்முறையீடுகளில் தீர்வு காணப்பட்டுள்ளது .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News