Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி அரசுக்கு தற்போது உள்ள கடன் சுமை எத்தனை இலட்சம் கோடிகள் தெரியுமா? நிதி அமைச்சகம் வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்கள்!!

மோடி அரசுக்கு தற்போது உள்ள கடன் சுமை எத்தனை இலட்சம் கோடிகள் தெரியுமா? நிதி அமைச்சகம் வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்கள்!!

மோடி அரசுக்கு தற்போது உள்ள கடன் சுமை எத்தனை இலட்சம் கோடிகள் தெரியுமா? நிதி அமைச்சகம் வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்கள்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Sept 2019 4:15 PM IST


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடன் அளவின் மதிப்பு 2019-20 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.88.18லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என நிதியமைச்சக அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்ற நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.84.68லட்சம் கோடி என்ற அளவில் இருந்தது. நடப்பு 2019-20 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு அறிக்கையை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் கீழ்கண்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது:


நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மத்திய அரசின் கடன் ரூ.88.18லட்சம் கோடியாகும். இதில், 89.4 சதவீதம் பொதுவான நிலையில் உள்ள கடன்களாகும். இதே காலகட்டத்தில், ரூ.2.21 லட்சம் கடன் பத்திரங்களை மத்திய அரசு வெளியிட்டது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1.44 லட்சம் அளவுக்கே கோடிக்குக் கடன் பத்திரங்கள் வெளியாகின.நடப்பு நிதியாண்டின் ஜூன் வரையிலான காலாண்டில், சிஎம்பி ரசீது மூலம் குறுகிய கால அளவிலான கடன் எதையும் மத்திய அரசு பெறவில்லை. அதேசமயம், ரிசர்வ் வங்கி தனது பணப்புழக்க சீரமைப்பு விதிகளின் கீழ் ரூ.17,599 கோடி நிதியை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது.


நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் காலத்தில், அந்நிய முதலீடு ரூ.1லட்சம் கோடியாக இருந்தது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும் . இதே கடந்த நிதியாண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 51 சதவீதம் அதிகமானதாகும்.சென்ற ஜூன் 28-ஆம் தேதி நிலவரப்படி, பன்னாட்டுச் செலாவணி கையிருப்பு 42,770 கோடி டாலராககும். சென்ற ஆண்டு ஜூன் மாதம் 29-ஆம் தேதி நிலவரப்படி, இது 40,610 கோடி டாலராக இருந்தது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .


This is a Translated Articles From THE ECONOMIC TIMES


Next Story
கதிர் தொகுப்பு
Trending News