Kathir News
Begin typing your search above and press return to search.

பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு அபராத கட்டணம் எவ்வளவு தெரியுமா?

எவ்வளவோ நாட்கள் காலக்கெடு விதித்தும் பான் எண்ணெ ஆதார் எண்ணுடன் இணைக்காதவர்களுக்கான அபராத கட்டணம் ஆராயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு அபராத கட்டணம் எவ்வளவு தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  10 July 2023 9:45 AM GMT

பான் எண்ணை ஆதாருடன் இணைக்காமல் விட்டு விட்டவர்கள், வருமான வரியை தாக்கல் செய்வதற்கு, 6,000 ரூபாய் வரைஅபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி கடந்த ஜூன் 30ம் தேதி என்றும்; தவறும் பட்சத்தில், ஜூலை 1ம் தேதி முதல், பான் எண் செயலிழந்ததாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


மேலும், பான் கார்டை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அபராதத் தொகையாக 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது கட்டணம் செலுத்தினால் மீண்டும் பான் என் செயலாக்கம் பெற அதிகபட்சம் 30 நாட்கள் ஆகும்.

இந்நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.ஒரு மாதத்திற்கும் குறைவாகவே கால அவகாசம் உள்ளதால், அபராதம் செலுத்தி பான் எண் செயல்படும் வரை காத்திருந்தால் வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசத்தை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அத்துடன் ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் கணக்கு செய்யவில்லை என்றால் அதற்கு தாமத கட்டணம் செலுத்த வேண்டும்.


ஆண்டு வருமானம் ஐந்து லட்சத்திற்கு மேல் இருந்தால் அதற்கு தாமத கட்டணம் ஐந்தாயிரம் ரூபாய், பான் எண் செயலாகத்திற்கு தாமத கட்டணம் ஆயிரம் ரூபாய். ஆக மொத்தம் 6000 ரூபாய் வரை அபராத தொகையாக செலுத்த வேண்டி இருக்கும்.மேற்கோள் மொத்த வருமானம், 5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், வருமான வரி தாக்கல் தாமதக் கட்டணம் 1,000 ரூபாய் பான் ஆதார் இணைப்பிற்கு 1000 ரூபாய் என மொத்தம் 2000 ரூபாய் செலுத்த வேண்டும்.


SOURCE :DINAMALAR

Next Story
கதிர் தொகுப்பு
Trending News