Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய சுற்றுலா பயணிகளை கௌரவப்படுத்த ராமாயண ரயில் சேவை தரும் இலங்கை அரசு

இலங்கையில் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இராமாயண ரயில் சேவை-இந்திய தூதரை சந்தித்தபின் ஜெயசூர்யா தகவல்

இந்திய சுற்றுலா பயணிகளை கௌரவப்படுத்த ராமாயண ரயில் சேவை தரும் இலங்கை அரசு

KarthigaBy : Karthiga

  |  10 Aug 2022 12:45 PM GMT

இலங்கையில் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ராமாயண ரயில் சேவையை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான ஜெயசூர்யா தெரிவித்தார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவும் அன்னிய செலவாணி கையிருப்பை மேம்படுத்தவும் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுலாத்துறையை சீரமைக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களை இந்திய சுற்றுலா பயணிகளுக்கு சுற்றி காட்டுவதற்காக சிறப்பு ரயில் சேவையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

ராமாயண பாரம்பரியத்தின் அடிப்படையில் பகிரப்பட்ட கலாச்சாரம் மற்றும் மதிப்பீடுகளை மேம்படுத்துவதில் இணைந்து பணியாற்ற கடந்த 2008ஆம் ஆண்டு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டனர். அதன்படி இந்த ரயில் சேவையை செயல்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது .இந்த ரயில் மூலம் 52 இடங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை இலங்கை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அந்த நாட்டின் சுற்றுலா தூதருமான ஜயசூரிய தெரிவித்துள்ளார் சமீபத்தில் இந்த பதிவில் நியமிக்கப்பட்ட அவர் கொழும்புவில் இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து பேசினார்.

இதை இந்திய தூதரகம் தனது ட்விட்டர் தளத்தில் நேற்று தெரிவித்திருந்தது. இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பொருளாதார மீட்சிக்கான கருவியாக சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் கவனம் செலுத்துவதாக கூறப்பட்டிருந்தது.

இதற்கு தனது ட்விட்டர் தளத்தில் பதிலளித்த ஜெயசூர்யா இந்திய தூதருக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு 'ராமாயண ரயில் சேவையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்' என குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே ஓராண்டில் பல முறை இலங்கைக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கும் திட்டத்தை இலங்கை மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தனிநபர் முதலீட்டாளர்கள் நீண்ட கால விசா வழங்கும் நடைமுறையை கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News