Kathir News
Begin typing your search above and press return to search.

'சாகச சாலை' என்று அழைக்கப்படும் ஒரு அழகான வீதி எங்கு உள்ளது தெரியுமா?

நியூசிலாந்தின் டியூன்டின் நகரில் 'சாகச சாலை' என்று அழைக்கப்படும் செங்குத்தான சாலை ஒன்று உள்ளது அதைப் பற்றிய தகவலை காண்போம்

சாகச சாலை என்று அழைக்கப்படும் ஒரு அழகான வீதி எங்கு உள்ளது தெரியுமா?
X

KarthigaBy : Karthiga

  |  26 Nov 2022 10:45 AM GMT

நியூசிலாந்தின் டியூண்டின் நகரில் ஒரு அழகான வீதியில் நடந்து செல்வதே சாகசம்தான். அதனாலேயே இந்த சாலை 'சாகச சாலை' என்று அழைக்கப்படுகிறது. இயல்பான சாலையை போல நினைத்து இதில் நீங்கள் செல்பி எடுத்தால் சறுக்கி கீழே விழ வேண்டும். கைத்தடி இல்லாமல் வீட்டை விட்டு வெளியே ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. இரு சக்கர வாகனமாக இருந்தாலும் கூட பின் சக்கரங்கள் மூன்று இல்லாமல் வண்டி ஓர் இடத்தில் நிற்காது .

இவை எல்லாம் சொல்லும்போது ஏதோ ஒரு மலைப்பகுதியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது ஒரு அழகான வீதி. நியூசிலாந்தின் டியூண்டின் நகரில் கடலில் இருந்து 30 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது 'பால்டிவின் வீதி'.

ஆரம்பிக்கும் இடத்திலிருந்து முடியும் வரை செங்குத்தாகவே செல்கிறது பால் டிவி உயரமான மலையில் எந்த விதமான உபகரணங்களும் இன்றி ஏறுவது போல மக்கள் சாலைகளில் ஊர்ந்தும், நடந்தும் செல்கின்றனர். உலகின் 'செங்குத்தான வீதி' என்று கின்னஸ் சாதனையிலும் இடம் பிடித்து விட்டது. இப்போது நியூசிலாந்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் இந்த 'சாகச சாலையும்' ஒன்று.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News