தமிழகத்தில் எந்தெந்த இடங்கள் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரியுமா?
தமிழகத்தில் வடுவூர்,சுசீந்திரம் உள்பட மேலும் 4 இடங்கள் ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
By : Karthiga
தமிழகத்தில் வடுவூர்,சுசீந்திரம் உள்பட மேலும் 4 இடங்கள் ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. உலகெங்கும் உள்ள ஈர நிலங்களை பாதுகாக்க ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் பல்வேறு நாடுகளுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.
இதன்படி பாதுகாப்புக்காக தேர்ந்தெடுக்கப்படும் ஈரநிலங்கள் ராம்சர் தளங்கள் என அழைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டில் 13 லட்சத்து 26 ஆயிரத்து 677 பரப்பளவைக் கொண்ட 75 கிராம் சட்டங்களை உருவாக்க தமிழகத்தின் சுசீந்திரம் தேரூர் சதுப்புநிலம் சித்திரங்குடி வடுவூர் மற்றும் காஞ்சிபுரம் பறவை சரணாலயங்கள் உள்பட மேலும் மேலும் 11 ஈர நிலங்களை ராம்சர் தளங்களின் பட்டியலில் இந்தியா சேர்த்துள்ளது. இந்த ஆண்டில் மொத்தம் 28 இடங்கள் ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன .
இந்திய ரம்சர் தளங்களில் தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 14 இடங்கள் உள்ளன. இதைத்தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்கள் உள்ளன.
தமிழகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் 260. 47 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சுசீந்திரம் தேரூர் சதுப்புநில வளாகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி பகுதியோடு சேர்ந்து உள்ளது. 94.23 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இது ஒரு முக்கியமான பறவைப்பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கூடுகட்டும் நோக்கத்துக்காக ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு வருகின்றன.
வடுவூர் பறவைகள் சரணாலயம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் 112.64 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய நீர்ப்பாசன ஏரியாகும். புலம்பெயர்ந்த பறவைகளுக்கான தங்கும் இடமாகவும் இது உள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் இனப்பெருக்கம் செய்வதற்கான பொருத்தமான சூழலை இது வழங்குகிறது.
காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். 96.89 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இது
1989ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. பல புலம் பெயர்ந்த ஹெரான் இனங்களின் கூடுகட்டும் இடமாக இது குறிப்பிடப்படுகிறது.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த 11 தளங்களின் மொத்த பரப்பளவு 76 ஆயிரத்து 316 ஹெக்டேர் ஆகும்.