Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே சன்னதியில் இரட்டை நடராஜர் அமைந்த திருக்கோவில் எது தெரியுமா?

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு திருக்கோவிலில் ஒரே சன்னதியில் இரட்டை நடராஜர் தரிசனம் தருவதாக அமைந்துள்ளது.

ஒரே சன்னதியில் இரட்டை நடராஜர் அமைந்த திருக்கோவில் எது தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  21 April 2023 4:30 PM GMT

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேவார பாடல் பெற்ற ஸ்தலமான குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரண்டு நடராஜபெருமானை தரிசனம் செய்யலாம். இரண்டு நடராஜர்களை தரிசனம் செய்வது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இவர்களில் ஒரு நடராஜர் சிரசில் பிறைசூடி இருக்கிறார். ஆனால் அவர் பாதத்தில் முயலகன் இல்லை .இதில் ஒரு நடராஜருக்கு உத்திராயனத்திலும் மற்றவருக்கு தட்சிணாயனத்திலும் பூஜைகள் நடக்கின்றன. தேவார பாடல் பெற்ற தலங்களில் 65 ஆவது தேவார தலமாகவும் சோழநாடு காவிரி தென்கரைத்தளங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது.


இத்தலத்தில் உள்ள கடம்பவனநாதரை சப்த கன்னியர் வழிபட்டுள்ளனர். இச்சிவத்தலத்தின் கருவறையில் இறைவன் கடம்பவன நாதரின் பின்புறத்தில் சப்த கன்னியர்கள் உள்ளனர் .மூலவரின் சன்னதியில் சப்த கன்னிகள் இருப்பது சிறப்பாகும். இறைவி பால குஜலாம்பாள் என்றும் முற்றிலா முலையம்மை என்றும் அழைக்கப்படுகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News