“தேவையா இந்த கேடுகெட்ட பிழைப்பு?” - நடிகர் விஜயின் பித்தலாட்டத்தை வெளிப்படுத்திய வீடியோ! தாறுமாறாக பகிரப்படுகிறது!!
“தேவையா இந்த கேடுகெட்ட பிழைப்பு?” - நடிகர் விஜயின் பித்தலாட்டத்தை வெளிப்படுத்திய வீடியோ! தாறுமாறாக பகிரப்படுகிறது!!
By : Kathir Webdesk
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே சோமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு நடிகர் விஜய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
யாரை எங்கே வைக்க வேண்டுமோ, அவரை அங்கே வைக்க வேண்டும். “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன் கண் விடல்”. ஒண்ணும் பயப்பட வேண்டாம் திருக்குறள்தான்.
அதாவது, இதனை - இந்த செயலை, இதனால் - இந்த கருவி கொண்டு, இவன் முடிக்கும் என்றாய்ந்து - இத்தனை பேரில் இவனால் மட்டுமே முடியும் என்று, அதனை - அந்த செயலை, அவன் கண் விடல் - அவங்கிட்ட விட்டுட்டு விலகிடனும்.
இப்ப மாத்தி கீத்தி உட்டீங்கண்ணா, இப்ப உதாரணத்துக்கு, பூக்கடையில ஒருத்தன் வேல பாத்துக்கிட்டு இருந்திருக்கான். ஒரு பொக்கே ஷாப்புண்ணு வையுங்களேன். அதுல வேல பாத்துக்கிட்டு இருந்திருக்கான். திடீன்ணு அவனுக்கு அங்க வேலை போயிடுச்சி. அவன் எங்க வேலைபாத்தான்னே தெரியாம... அவன் கொஞ்சம் வேண்டப்பட்ட பையனா வேற போயிடுறான். சோ, அவன கொண்டு வந்து ஒரு பட்டாசு கடையில... ஒரு வெடி கடையில உட்கார வைச்சிர்றானுங்க.
ஒரு பட்டாசு விக்கலையாம். என்னாடான்ணு பாத்தா, பத்து நிமிஷத்துக்கு ஒருக்க, வாளியில தண்ணிய புடிச்சிட்டு, பட்டாசு மேல தெளிச்சிட்டு இருந்திருக்கான், பூக்கடையில தெளிக்கிற மாதிரி. தொழில் பக்தி, அது அவன விட்டு போகல.
இது யார் மேல உள்ள தப்பு?
So, The Moral of the story is...
இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.
நடிகர் விஜய் சொன்ன இந்த திருக்குறளையும், அதற்கான உதாரண கதையையும் கேட்டு ரசிகர்கள் மெய் சிலிர்த்தனர்.
நடிகர் விஜய் கூட, நடிகர் ரஜினி போன்று கதை சொல்லி அசத்த ஆரம்பித்து விட்டார் என்றுதான் அனைவரும் பாராட்டினர்.
நடிகர் விஜய் தனது குழந்தைகளை தமிழே இல்லாத லண்டன் பள்ளிகளில் படிக்க வைத்தாலும், அவர், திருக்குறள் போன்ற தமிழ் நூல்களை படிக்க தொடங்கி இருப்பதாக பலர் மகிழ்ந்தனர்.
பல நூல்களைப் படித்து, கதைகளையும் தேர்வு செய்து மேடையில் சொல்லி அசத்துகிறார் என்றும் நம்பினர்.
ஆனால், இவை எல்லாம் இரண்டு நாட்களுக்கு கூட நீடிக்கவில்லை.
நடிகர் விஜய், கதை மட்டும் திருடுபவர் அல்ல, பேச்சைக்கூட மற்றவர்களிடம் இருந்துதான் திருடி உள்ளார் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
பிரபல பட்டிமன்ற பெண் பேச்சாளர் ஒருவர், ஒரு பொது மேடையில் பேசிய திருக்குறளையும், அதை விளக்குவதற்காக அவர் சொன்ன, “பூக்கடையில் வேலை பார்த்தவனை பட்டாசு கடையில் வேலைக்கு வைத்த” கதையையும் அப்படியே கொஞ்சம்கூட மாற்றாமல் திருடி உள்ளார் நடிகர் விஜய்.
பட்டிமன்ற பெண் பேச்சாளர் பேசியதும், நடிகர் விஜய் திருடி வாந்தி எடுத்ததையும் ஒரே வீடியோவாக்கி உலவ விட்டு உள்ளனர். அது சமூக வலைத்தளங்களின் சந்துபொந்தெல்லாம் சுற்றி வருகிறது.
இதுவரை திரைப்படத்தின் கதைகளையும், காட்சிகளையும்தான் தமிழ் சினிமாககாரர்கள் திருடுவார்கள் என்ற நிலை இருந்தது. அதனை நடிகர் விஜய் உடைத்து புதிய சாதனைப் படைத்து உள்ளார்.
விஜயின் பேச்சு திருட்டு இப்போது ஒரு விவாதப் பொருளாகி உள்ளது.
“ஆமா, நடிச்சிட்டு, அப்புறம் தயாரிப்பாளர் காசுல குடிச்சிட்டு, கூத்தடிக்குறவர கொண்டு போய் முதல்வர் ஆக்கினால்?”
“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண்விடல்”...