“இனியும் காங்கிரசில் இருப்பதில் அர்த்தமில்லை” - ஓட்டம் பிடித்த மாநில பொதுச் செயலாளர்!!
“இனியும் காங்கிரசில் இருப்பதில் அர்த்தமில்லை” - ஓட்டம் பிடித்த மாநில பொதுச் செயலாளர்!!
By : Kathir Webdesk
மராட்டிய மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த சத்யஜித் தேஷ்முக் திடீரென கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது காங்கிரஸில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநில முன்னாள் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ஷிவாஜி ராவ் தேஷ்முக்கின் மகன்தான் சத்யஜித் தேஷ்முக். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்த சத்யஜித் தேஷ்முக், மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர்களின் முகமாக வெளிப்பட்டவர்.
காங்கிரசில் இருந்து விலகியது குறித்து சத்யஜித் தேஷ்முக் கூறியதாவது:-
நான் காங்கிரசிலிருந்து விலகுவதற்கான முக்கிய காரணம் அங்கு ஏற்பட்டுள்ள அதிருப்திதான். காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு எனது ஆதரவாளர்களுக்காக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் அதற்கு ஏற்ற இடத்தைத் தேடி நான் செல்ல வேண்டியுள்ளது. காங்கிரசில் இனியும் தொடர்வதில் அர்த்தமில்லை.
சாங்லி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள எனது மூத்த நிர்வாகிகளிடம் இதுகுறித்து கலந்து பேசிவிட்டு விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.