Kathir News
Begin typing your search above and press return to search.

“அமேசான் காடுகளை பாதுகாக்க மாட்டிறைச்சி சாப்பிடாதீர்” - டைட்டானிக் நாயகன் அதிரடி!!

“அமேசான் காடுகளை பாதுகாக்க மாட்டிறைச்சி சாப்பிடாதீர்” - டைட்டானிக் நாயகன் அதிரடி!!

“அமேசான் காடுகளை பாதுகாக்க மாட்டிறைச்சி சாப்பிடாதீர்” - டைட்டானிக் நாயகன் அதிரடி!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Aug 2019 11:11 AM GMT



திரைப்பட இயக்குனர் ரஞ்சித், “மாட்டை தெய்வமாக நீ வணங்கினால், அதை தின்பவன் நான். அதவாது உன் கடவுளை தின்பவன் நான்” என்று ஹிந்துக்கள் மனம் புண்படும்படி பேசி தன் கிறிஸ்தவ மதவெறியை நிலைநாட்டினார்.


ஆனால் உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர், யுனெஸ் கோ தூதுவர், இயற்கை ஆர்வலர் என்ற பன்முகம் கொண்ட டைட்டானிக் நாயகன் லியர்னாடோ டி காப்ரியோ, “அமேசான் காடுகளை பாதுகாக்க, மாட்டிறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.


என்ன ஆனது அவருக்கு? ஏன் அவரும் பசு குண்டர்கள் போல் பேசுகிறார் என்று யோசிக்கிறீர்களா? காரணமில்லாமல் இல்லை.


இன்று உலகை அச்சுறுத்தி வரும் மிகப்பெரிய கேடு, உலக வெப்பமயமாதல். அதற்கு மிகப் பெரும் காரணி கார்பன் படிமங்கள் அதிகம் கொண்ட பசுமை இல்ல வாயுக்கள் (மீத்தேன், கார்பன் டை ஆக்சைட் போன்ற வாயுக்கள்). உலகில் மனித செயல்களால் உருவாகும் மீத்தேனில் 37% கால்நடைகளால் விளைவதுதான். அதில் பெரும் பங்கு வகிக்கிறது மாட்டிறைச்சி


மாட்டிறைச்சி அதிகமாக சாப்பிடுவதன் மூலம், அதிலிருந்து வெளியேறுதட மீத்தேன் அளவும் அதிகமாகிறது. பிரேசில்தான் உலகின் மிகப் பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதி நாடு என்பது குறிப்பிடத்தக்கது.


அமேசான் காடுகள் உலகின் நுரை ஈரல் என்று வர்ணிக்கப் படுகின்றன. அதீத மாட்டிறைச்சி தயாரிப்பிற்காக அமேசான் காடுகளை அழிப்பது என்பது உலகையும் அதில் வாழும் உயிரினங்களையும் சேர்த்தே அழிக்கும் செயல்.




https://www.instagram.com/p/B1eBsWDlfF1/?utm_source=ig_embed



இதன் காரணமாகவே லியர்னாடோ டி காப்ரியோ, பசு குண்டர்கள் என்று வர்ணிக்கப் படும் பசுப் பாதுகாவலர்கள் போல் பேசுகிறார். உண்மையை உரக்க சொல்கிறார்.


தவிர அமேசான் காடுகள் அழிப்பில் ஒரு இன அழிப்பும் அடங்கி உள்ளது. அமேசான் காடுகளில் பிரேசிலின் பூர்வகுடிகள் பலரும் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். பிரேசில் நாட்டை15- 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஸ்பானியர்கள் காலனியாக்கி பூர்வகுடிகளை கொன்றொழித்தனர்.


அவர்களில் எஞ்சியவர்கள் இன்றும் அமேசான் காடுகளில் வாழ்கின்றனர். அவர்களை ஒழித்து துடைத்தெறியும் செயலாகவும் இது இருக்கலாம். ஒரு அமேசான் பழங்குடியினைப் பெண் தங்களை காட்டை விட்டு விரட்ட கிறித்தவ மிஷனரிகள் முயற்சிக்கிறார்கள் என்று கதறும் வீடியோ ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News