Kathir News
Begin typing your search above and press return to search.

போதை பிரியர்களுக்கு பெண்களை திருமணம் செய்து கொடுக்காதீர்கள் - வேதனையுடன் அனுபவம் பகிரும் மத்திய அமைச்சர்!

மதுப்பழக்கம் என் மகனை கொன்றுவிட்டது.மருமகள் விதவை ஆகிவிட்டார். எனவே போதை பிரியர்களுக்கு உங்கள் வீட்டுப் பெண்களை திருமணம் செய்து கொடுக்காதீர்கள். இது ஒரு சாதாரண மனிதனின் விண்ணப்பம் அல்ல, மத்திய மந்திரி ஒருவரின் வேதனை வேண்டுகோள்.

போதை பிரியர்களுக்கு பெண்களை திருமணம் செய்து கொடுக்காதீர்கள் - வேதனையுடன் அனுபவம் பகிரும் மத்திய அமைச்சர்!
X

KarthigaBy : Karthiga

  |  26 Dec 2022 1:45 PM GMT

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார ராஜங்க மந்திரி கவுசல் கிஷோர். உத்தரபிரதேச மாநிலம் லம்புவா சட்டசபை தொகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு போதை பழக்க மீட்பு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசினார்.


எனது மகன் ஆகாஷ் கிஷோருக்கு அவனது நண்பர்களால் மது பழக்கம் ஏற்பட்டது. அதனால அவனை ஒரு போதை அடிமைகள் மீட்பு மையத்தில் சேர்த்தோம். அவன் அந்த பழக்கத்தில் இருந்து மீண்டு விட்டதாக கருதி ஆறு மாதங்கள் கழித்து திருமணம் செய்து வைத்தோம். ஆனால் திருமணத்திற்கு பின் அவன் மீண்டும் குடிக்க தொடங்கினான்.அதனாலேயே இறந்தும் போனான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவன் இறந்தபோது என்பேரனுக்கு இரண்டு வயது கூட ஆகவில்லை என்று குரல் தழுதழுத்த மத்திய மந்திரி கவுசல் கிஷோர், தொடர்ந்து பேசியதாவது:-


ஒரு குடிகாரரின் ஆயுள் ரொம்ப குறுகியது.நான் ஒரு எம்.பி ஆகவும் என் மனைவி ஒரு எம்.எல்.ஏவாகவும் இருந்துமே எங்கள் மகனைக் காப்பாற்ற முடியவில்லை. அப்படி இருக்கும்போது ஒரு சாதாரண மனிதனால் எப்படி தங்கள் பிள்ளையை காப்பாற்ற முடியும்? நான் என் மகனை காப்பாற்ற தவறியதால் என் மருமகள் விதவை ஆகிவிட்டார். தயவுசெய்து உங்கள் மகள்கள் சகோதரிகளுக்கு இந்த நிலைமை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். போதை பிரியர்களுக்கு உங்கள் வீட்டுப் பெண்களை திருமணம் செய்து கொடுக்காதீர்கள். குடிப்பழக்கம் உள்ள ஒரு அதிகாரியை விட அந்த பழக்கம் இல்லாத ஒரு ரிக்ஷாக்காரன் அல்லது கூலி தொழிலாளி நல்ல மாப்பிள்ளை. நம் நாட்டில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நடந்த 90 ஆண்டு போராட்டத்திலேயே 6.32 லட்சம் பேர் தான் இறந்தனர். ஆனால் போதைப் பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பேர் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே போதை பழக்கத்தின் பாதிப்பு குறித்து மாணவப் பருவத்திலேயே பள்ளி காலை பிரார்த்தனையின் போது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News