ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் எங்கள் நாட்டில் நுழைவதை விரும்பவில்லை ! ரஷ்யா அதிபர் புதின்!
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
By : Thangavelu
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
அது போன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேற்றப்படும் மக்களை மத்திய ஆசிய நாடுகளில் எவ்வித விசா நடைமுறைகளையும் பின்பற்றாமல் அகதிகளாக தங்கவைக்க அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தனது கட்சி தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய புதின் ஆப்கானிய மக்களை எவ்வித விசா நடைமுறைகளும் இன்றி மத்திய ஆசிய நாடுகளில் மேற்கத்திய நாடுகள் தங்க வைக்க திட்டமிட்டுள்ளது.
ஆனால் ஆப்கானிஸ்தான் அகதிகளை தங்கள் நாட்டிற்குள் விசா இல்லாமல் தங்க வைக்க ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. அகதிகள் என்ற போர்வையில் ஆப்கானிய பயங்கரவாதிகள் ரஷ்யாவிற்குள் நுழைவதை நான் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Source: Dailythanthi
Image Courtesy: The Times Of Israel
https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/23085944/Dont-want-Afghan-militants-in-Russia-says-Vladimir.vpf