விநாயகர் பற்றி கிண்டலடித்த டி.ஆர்.பாலு மகன் !
விநாயகர் பற்றி கிண்டலடித்த டி.ஆர்.பாலு மகன் !
By : Kathir Webdesk
திமுக முக்கியஸ்தர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா, இவர் மன்னார்குடி எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர் ஒருவர் குழந்தை பருவ விநாயகர் யானை மீது சவாரி வரும் படத்தை சமூக ஊடகங்களில் ஷேர் செய்திருந்தார்.
இதை தனது டுவிட்டரில் ஷேர் செய்த டி.ஆர்.பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா விநாயகர் இந்திய யானையை விட்டுவிட்டு ஆப்பிரிக்க யானையில் வருவது போல படம் போடலாமா ? இந்திய யானைக்கும் ஆப்பிரிக்க யானைக்கும் வித்தியாசம் தெரியாத இவா எப்படி டைவெர்சிட்டி புரிஞ்சிண்டு யூனிட்டி கொண்டு வருவா? என நக்கலாக கேட்டுள்ளார்.
மேலும் விநாயகர் கிருஷணர் போல உடை அணிந்து கொண்டு எப்படி நெத்தியில விபூதி, குங்குமம் பூசிக்கொண்டு வரும் ஆப்பிரிக்க யானை மீது சவாரி வருவார் எனவும் கிண்டல் செய்துள்ளார்.
பக்தர்களுக்கு ஒன்றும் தெரியாதது போலவும் இவர் ஏதோ சகலமும் அறிந்து கொண்டிருக்கும் பக்தி பண்டிதன் போலவும் பேசும் இது போன்ற மண்டூகங்கள் இந்து கடவுள்களை பற்றி கொஞ்சமாவது ஞானம் இருக்க வேண்டும் என்றும் பக்தர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
முதலில் விநாயகனை ஒரு உலக நாயகனாக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். அவருக்கு ஆப்பிரிக்க யானை இந்திய யானை என்ற பேதம் இல்லை. இரண்டாவது சைவர்கள், வைணவர்கள் அனைவரும் விநாயகனை பொதுவாக வழிபடுபவர்கள். அவ்வவர் விருப்பப்படி விநாயகனுக்கு உடை அணிவித்து அவ்வவர் கலாச்சாரப்படி வழிபடுவது வழக்கமான ஒன்றாகும்.
வழிபடும் முறைகளில் சிறிய வேறுபாடுகள் இருந்தாலும் இந்துக்கள் சைவ, வைணவ பேதங்களை ஒதுக்கி விட்டு விநாயக சதுர்த்தியை ஆண்டாண்டு காலமாக இந்துக்கள் ஒற்றுமையுடன் கொண்டாடி வரும் நிலையில் அரசியல் பிழைப்புக்காக இந்து தெய்வங்களை நையாண்டி செய்யும் இது போன்ற பிறவிகள் பிற மத வழி பாட்டு முறைகளை கிண்டல் செய்வார்களா?
அதை மற்ற மதத்தினர் சகித்துக் கொள்வார்களா? மற்ற மதத்தினரின் பண்டிகைகளுக்கு சிறுபான்மையினரிடம் பயந்துகொண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் இவர்கள் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை. சின்ன புத்தி தனமாக மற்றவர்களின் நம்பிக்கையை இப்படி கொச்சபடுத்தாமல் இருக்கலாமே.