அதிர வைக்கும் பருவநிலை மாற்றங்கள்
பருவநிலை மாற்றங்கள் மனிதர்களை அச்சுறுத்தும் வகையில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிவிட்டது.
By : Karthiga
புவி வெப்பமயமாதல் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க தொடங்கியதில் இருந்து பருவகால நிலையில் கடும் மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. இதனை மத்திய அரசும் உறுதி செய்துள்ளது. மத்திய புவி அறிவியல் அமைச்சகம் இந்திய பிராந்தியத்தில் பருவநிலை மாற்றத்தின் மதிப்பீடு என்று அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்திய துணைக்கண்டத்தில் பருவநிலை மாற்றத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கத்தை பிரதிபலிப்பாக அது அமைந்துள்ளத.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் அதிர வைக்கும் பருவநிலை மாற்றங்களை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளன. இந்தியாவின் சராசரி வெப்பநிலை 1901ல் இருந்து 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தோராயமாக 0.7 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. 1950 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடையே தினசரி மழைப்பொழிவில் கடும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அதன் தாக்கமாக 1951 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வரட்சி கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் வட இந்திய பெருங்கடலில் கடல் மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.ஆண்டுக்கு 3.3 மில்லி மீட்டர் என்ற விகிதத்தில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.1998 - 2018 காலகட்டத்தில் பருவமழைக்கு பிந்திய காலங்களில் அரபிக்கடலில் கடுமையான சூறாவளிப்புயல்கள் அதிகரித்துள்ளன.
SOURCE :DAILY THANTHI