அத்திவரதரை செருப்பில் வைத்து அவமதித்த திக உறுப்பினர்- கைது செய்து விசாரணை!
A DK Follower made a controversial Activity.
By : Shiva
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவிலின் முன்பு கடை நடத்தி வந்த திராவிடர் கழகத்தை சேர்ந்த ஒருவர் செருப்பில் சுவாமி படத்தை வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அவருடன் வாக்குவாதம் செய்த இந்து அமைப்பினர் அவர் மீது புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடக்கூடாது என்று திமுக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து திமுக அரசுக்கு நல்ல புத்தியை வணங்க வேண்டும் என்று கடவுளை வேண்டியும் இந்து முன்னணியினர் தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணு காஞ்சியில் உள்ள சங்குபானி விநாயகர் கோவிலில் போராட்டம் செய்த போது அங்கு கோவிலின் முன் கடை வைத்திருக்கும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பூபதி என்பவர் அத்தி வரதர் நெருப்பில் வைத்து அவமதித்து உள்ளார்.
இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்த போது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பூபதி "அப்படித்தான் செய்வோம். இது எங்கள் ஆட்சி" என்று ஆணவமாக பேசியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்து முன்னணியினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் பூபதி கைது செய்யப்பட்டுள்ளார். கடவுள் நம்பிக்கையே இல்லாத இந்து கடவுள்களை அவமதித்து பேசும் செயல்படும் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களுக்கு கோவிலில் வருமானம் ஈட்ட அனுமதி அளித்தது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இதுபோன்று அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இன்னும் எத்தனை கோயில்களில் சுவாமியை நிந்தனை செய்து கொண்டே கோவில் மூலம் திகவினரும் பிற மதத்தினரும் வருவாய் ஈட்டுகின்றனரோ என்ற கேள்வியையும் இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.
Source : Twitter