"தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற ஸ்டாலின் முயற்சி" - போட்டு உடைத்தார் டாக்டர் ராமதாஸ்!
"தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற ஸ்டாலின் முயற்சி" - போட்டு உடைத்தார் டாக்டர் ராமதாஸ்!

By : Kathir Webdesk
தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற ஸ்டாலின் முயற்சி செய்வதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசும்போது கூறியதாவது:-
ஸ்டாலின் 360 கோடி ரூபாய் கொடுத்து பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் பாண்டே என்பவரை வரவழைத்துள்ளார். திமுகவிற்கு மூளையாக இனி இவர் செயல்படுவார். அந்த அளவுக்கு திமுகவில் அறிவு பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இங்கு உள்ள முஸ்லிம்கள் உள்பட யாருக்கும் எந்தவித பாதிப்பும் வராது என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார். இருந்தாலும் இந்துக்களிடமும், முஸ்லிம்களிடமும் பொய்யான தகவல்களை திமுகவினர் கூறி கலவரத்தை தூண்டுகின்றனர். தமிழகத்தை கலவர பூமியாக மாற்றுவதற்கான முயற்சிகளை ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.
எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் திட்டமிட்டு கலவரத்தை நடத்தும். கலவரத்தை உண்டாக்கி ஓட்டுகளை பெற்று வெற்றி பெற வேண்டுமென ஸ்டாலின் எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அது ஒருபோதும் நடக்காது, நடக்கவும் விடக்கூடாது. அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜாதி, மத பேதம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைவரும் பாடுபடுகிறோம்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
