Kathir News
Begin typing your search above and press return to search.

போதை மருந்தில்லா இந்தியா இயக்கம்: மத்திய அரசின் முக்கிய முன்னெடுப்பு சாதனை!

போதை மருந்து இல்லாத இந்தியா இயக்கத்தின் மூலம் முக்கிய முன்னெடுப்பு சாதனைகள்.

போதை மருந்தில்லா இந்தியா இயக்கம்: மத்திய அரசின் முக்கிய முன்னெடுப்பு சாதனை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 Dec 2022 3:41 AM GMT

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தால் போதை மருந்தில்லா இந்தியா இயக்கம் ஆகஸ்ட் 15, 2020 அன்று தொடங்கப்பட்டது. இது போதை மருந்து தடுப்பு அமைப்பால் பெறப்பட்ட அறிக்கையின்படி 372 மாவட்டங்களில் இந்த இயக்கம் அமல்படுத்தப்பட்டது. உயர்க்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் போதை மருந்தின் தீமை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டது.


அத்துடன், இப்பழக்கத்திற்கு ஆளானவர்களை கண்டறிந்து கலந்தாய்வு செய்தல், மருத்துவமனைகளில் சிகிச்சை வசதிகள், மறுவாழ்வு மையங்கள், இதற்கான சேவைகளில் ஈடுபடுவோருக்கு திறன்மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. ட்விட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தப் படுகிறது.2019-ம் ஆண்டு அரசிலமைப்பு சட்டத்தின் 103-வது திருத்தத்தின் படி பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அரசு வேலை மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.


தேசிய போதைப்பொருள்இல்லா உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் 99,595 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஒரு கோடியே 67 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். பெருந்தொற்றால் பெற்றோர் அல்லது காப்பாளர் அல்லது தத்தெடுத்த பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிப்பை நிறைவு செய்ய உதவும் நோக்கில் பிரதமரின் குழந்தைகள் நலநிதியம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் 2022-23ம் நிதியாண்டில் இதுவரை 789.40 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதனால், 3947 மாணவர்கள் பயனடைந்தனர்.

Input & Image courtesy: PIB

Next Story
கதிர் தொகுப்பு
Trending News