பொருளியல் குற்றம் சாதாரணமானது அல்ல! விடுதலை செய்ய வாய்ப்பே இல்லை! ப.சிதம்பரத்திடம் நீதிமன்றம் திட்டவட்டம்!
பொருளியல் குற்றம் சாதாரணமானது அல்ல! விடுதலை செய்ய வாய்ப்பே இல்லை! ப.சிதம்பரத்திடம் நீதிமன்றம் திட்டவட்டம்!
By : Kathir Webdesk
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்ததுடன் இது தேசத்தை பாதிக்கும் பொருளியல் குற்றம் என்பதால் இந்த வழக்கில் விடுதலை செய்வதற்கான வாய்ப்பே இல்லை என நேற்று நடைபெற்ற விசாரணையில் திட்டவட்டமாக கூறியுள்ளது.
அந்த வழக்கில், தனக்குப் பிணை அனுமதிக்கும்படி கேட்டு ப.சிதம்பரம் மீண்டும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், பொருளியல் குற்றம் சாதாரணமானதல்ல , இது ஒட்டு மொத்த சமூகத்தையும், தேசத்தையும் தீவிரமாக பாதிக்கும் ஓன்று, எனவே இதை அசாதாரணமாக கருத முடியாது, தீவிரமாக கருத வேண்டும் என்று குறிப்பிட்டது.
இந்த வழக்கில் ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் சிக்கிய தவறான நபர்களுக்கு நாட்டின் வருமானத்தை விட்டுக் கொடுக்கும் வகையில் சுயநலமாக சிதம்பரமும், அவரது மகன் கார்த்திக்கும் இலஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ப.சிதம்பரத்திற்கு சிபிஐ வழக்கில் பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் பிணை மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை தொடுத்த வழக்கில் கடந்த அக்டோபா் 16ஆம் தேதி கைதான ப.சிதம்பரம் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். ஆனால் அவருக்கெதிரான சாட்சியங்கள் உறுதியாக உள்ளதால் அவரால் அவரால் வெளியே வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.