Kathir News
Begin typing your search above and press return to search.

மூன்றடுக்கு ஏ.சி ரெயில் பெட்டிகளில் 'எகனாமி' வகுப்பு மீண்டும் வருகிறது - எட்டு சதவீதம் கட்டணம் குறையும்

ரெயில்களில் மூன்றடுக்கு ஏ.சி பெட்டிகளில் 'எகனாமி' வகுப்பு மீண்டும் அமல்படுத்தப்படுகிறது .அந்த வகுப்பில் 8% வரை குறைவான கட்டணம் வசூலிக்கப்படும்.

மூன்றடுக்கு ஏ.சி ரெயில் பெட்டிகளில் எகனாமி வகுப்பு மீண்டும் வருகிறது - எட்டு சதவீதம் கட்டணம் குறையும்

KarthigaBy : Karthiga

  |  23 March 2023 11:15 AM GMT

ரெயில்களில் மூன்றடுக்கு ஏ.சி பெட்டிகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 'எகனாமி' வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகுப்புக்கான பயண கட்டணம் வழக்கமான மூன்று அடுக்கு ஏ.சி பயண டிக்கெட் கட்டணத்தை விட ஆறு முதல் 8% குறைவாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. சிறப்பான மலிவான ஏ.சி ரெயில் பயணத்தை அளிப்பதற்காக இந்த வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.


வழக்கமான மூன்றடுக்கு ஏ.சி பெட்டிகளில் 72 படுகைகளும் 'எகனாமி' வகுப்பில் 80 படுகைகளும் இருந்தன. 'எகனாமி' வகுப்பு பயணிகளுக்கு போர்வை வழங்கப்படாமல் இருந்தது. 'எகனாமி' வகுப்பு அறிமுகம் மூலம் ஒரே ஆண்டில் ரயில்வேக்கு ரூபாய் 231 கோடி வருவாய் கிடைத்தது. குறிப்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 15 லட்சம் பயணிகள் அந்த வகுப்பில் பயணம் செய்தனர். அதன் மூலம் மட்டும் ரூ.177 கோடி வருவாய் கிடைத்தது .


இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எகனாமி வகுப்பு வழக்கமான மூன்றடுக்கு ஏ.சி பெட்டிகளுடன் இணைக்கப்பட்டது. அந்த வகுப்பு பயணிகளுக்கும் போர்வை வழங்கப்பட்டதால் போர்வைக்கான கட்டணமாக ரூபாய் 60 முதல் ரூ.70 வரை பயணிகள் கூடுதலாக செலுத்த வேண்டி இருந்ததால் இரு பிரிவினருக்கும் கட்டணம் சமமாகிவிட்டது. இந்த நிலையில் மூன்றடுக்கு ஏ.சி பெட்டிகளில் மீண்டும் 'எகனாமி' வகுப்பு அமல்படுத்தப்படுவதாக ரயில்வே நேற்று அறிவித்தது.


இதன் மூலம் கடந்த நவம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. 2021 ஆம் ஆண்டு 'எகனாமி' வகுப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என்று ரெயில்வே அறிவித்துள்ளது .அதனால் வழக்கமான கட்டணத்தை விட 'எகனாமி' வகுப்பு பயணிகளுக்கு ஆறு முதல் 8 சதவீதம் வரை கட்டணம் குறைவாக இருக்கும் .அதே சமயத்தில் அவர்களுக்கு போர்வை வழங்கப்படும் என்று ரயில்வே கூறி உள்ளது.


இந்த அறிவிப்பால் ஏற்கனவே ஆன்லைன் மூலமாகவும், டிக்கெட் கவுண்டர் மூலமாகவும் முன்பதிவு செய்த மூன்று அடுக்கு ஏ.சி பெட்டி பயணிகள் கூடுதல் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது. தற்போது ரெயில்களில் வழக்கமான மூன்று அடுக்கு ஏ.சி பெட்டிகள் 11,277-ம் 'எகனாமி' வகுப்பு பெட்டிகள் 463 உள்ளன.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News