கோட்டு சூட்டில் கலக்கும் எடப்பாடி பழனிச்சாமி! கதிகலங்கிப்போன ஸ்டாலின்!!
கோட்டு சூட்டில் கலக்கும் எடப்பாடி பழனிச்சாமி! கதிகலங்கிப்போன ஸ்டாலின்!!
By : Kathir Webdesk
லண்டன் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட்டு சூட்டு போட்டு கலக்குகிறார். இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் கதிகலங்கிபோய் உள்ளார்.
15 நாள் அரசு முறை பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று புறப்பட்டு லண்டன் சென்றார். லண்டனில் முதல்வர் முன்னிலையில் இரண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகின.
மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தமும், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர் பணி தரத்தை மேம்படுத்த சர்வதேச மனித மேம்பாட்டுத் துறையுடன் ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட்டு சூட்டு போட்டு இருந்தார்.
எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்குபோய் எதையும் சாதிக்கப்போவதில்லை. ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். என்றெல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக கேலி செய்து வந்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின்கோட்டு, சூட்டு அவதாரம் ஸ்டாலினை மட்டுமல்ல அவரை கேலி செய்த ஒவ்வொருவரையும் வாயை அடைக்க செய்துள்ளது.
அதோடு முதல்நாளே இரண்டு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டது ஸ்டாலினை கதிகலங்க செய்துள்ளது.