ஆப்சென்ட் ஆகாமல் வந்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான்! சபாநாயகர் தனபால்!
cm news

By : Thangavelu
தமிழக சட்டசபை நடைபெற்ற அனைத்து நாட்களிலும் தவறாமல் கலந்து கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று சட்டப்பேரவை நடைபெற்றது.
அப்போது சபாநாயகர் தனபால் பேசியதாவது:
2016ம் ஆண்டு முதல் இன்று வரை பேரவை 167 நாட்கள் நடைபெற்றுள்ளது. மொத்தம் 858 மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது.
ஆளுங்கட்சியை காட்டிலும் எதிர்க்கட்சிக்கு அதிகநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 16 மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதன் முறையாக எல்லா நாட்களும் தவறாமல் கலந்து கொண்டு ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், எதிர்க்கட்சித்தலைவராக மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டார் என்று சபாநாயகர் தனபால் நன்றி தெரிவித்தார்.
