'பொதுத்தேர்வுக்கு 6.70 லட்சம் மாணவர்கள் ஏன் வரவில்லை என இனி கண்டுபிடிக்கப்படும்' - அமைச்சர் அன்பில் மகேஷ்
பொதுத்தேர்வில் 6.70 லட்சம் மாணவர்கள் ஆப்சென்டான காரணத்துக்கு சிறப்பு தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
By : Mohan Raj
பொதுத்தேர்வில் 6.70 லட்சம் மாணவர்கள் ஆப்சென்டான காரணத்துக்கு சிறப்பு தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாத முதல் வாரத்தில் தொடங்கிய 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கிட்டத்தட்ட 6.70 லட்சம் மாணவர்கள் எழுதாமல் ஆப்சென்டான விவகாரம் தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இவ்வளவு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதாமல் இருந்தது இதுவே முதன்முறையாகும். இது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, 'பொதுத்தேர்வில் 6.70 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு வருகை தராத காரணம் குறித்து ஆராய்ந்து காரணத்தை கண்டுபிடிப்போம். மாணவர்கள் சிறப்பு தேர்வுகள் எழுதுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது' எனவும் கூறினார்.
சமீபகாலமாக அரசு பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன செயல்கள் குறித்த வீடியோக்கள் இணையங்களில் அதிகம் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.