Kathir News
Begin typing your search above and press return to search.

'அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் வரை மௌன விரதம்' : சபதம் எடுத்த மூதாட்டி- கும்பாபிஷேக தினத்தோடு 30 ஆண்டு சபதம் நிறைவு!

ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தன்று தனது 30 ஆண்டு மௌன விரதத்தை நிறைவு செய்கிறார் 85 வயது மூதாட்டி. விழாவை காண அவர் அயோத்தி சென்றுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் வரை மௌன விரதம் : சபதம் எடுத்த மூதாட்டி- கும்பாபிஷேக தினத்தோடு 30 ஆண்டு சபதம் நிறைவு!

KarthigaBy : Karthiga

  |  10 Jan 2024 5:45 AM GMT

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரை சேர்ந்தவர் சரஸ்வதி தேவி. இவருடைய கணவர் தேவகி நந்தன். இந்த தம்பதிக்கு நான்கு மகள்களும் ,நான்கு மகன்களும் உள்ளனர். ராமர் மீது அளவு கடந்த பக்தி கொண்ட சரஸ்வதி தேவி கடந்த 1986 ஆம் ஆண்டு தனது கணவர் இறந்த பிறகு தனது வாழ்வை ராமருக்காகவே அர்ப்பணித்தார் .


கடந்த 1992-ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்க பட்ட தினத்தில் சரஸ்வதி தேவி ஒரு சபதம் எடுத்தார். அதாவது அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் வரை மௌன விரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். முதல் 30 ஆண்டுகள் மௌன விரதத்தை கடைப்பிடித்து வருகிறார். அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான வருகிற 22-ஆம் தேதி அன்று அவர் தனது விரதத்தை நிறைவு செய்கிறார்.


சரஸ்வதி தேவியின் இந்த மௌன விரதம் பற்றிய செய்தி உத்தரபிரதேசத்திலும் பரவியது. இதனால் அவரை அங்குள்ள மக்கள் 'மௌனி மாதா' என்று அழைத்து வந்தனர் .சுமார் 30 ஆண்டுகளாக கடைபிடித்து வரும் சரஸ்வதி தேவியின் மௌன விரதம் பற்றி அவருடைய இளைய மகன் 'ஹரே ராம் அகர்வால்' கூறுகையில், "கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் மௌன விரதத்தை மேற்கொண்டு வரும் எங்கள் தாயார் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை தினமும் ஒரு மணி நேரம் மட்டும் எங்களுடன் பேசுவார். மற்ற நேரங்களில் யாருடனும் பேச மாட்டார்.


ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய தினத்தில் இருந்து எங்கள் தாயார் 24 மணி நேரமும் மௌன விரதத்தை கடைபிடித்து வருகிறார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வருமாறு மஹந்த் நிருத்ய கோபால் தாசின் சீடர்கள் எங்களௌ தாயாருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதனை ஏற்று விழாவில் கலந்து கொள்வதற்காக தன் பாத் நகரில் இருந்து ரயில் மூலம் அயோத்திக்கு புறப்பட்டார். கும்பாபிஷேக தினத்தன்று எங்கள் தாயார் அவரது மௌன விரதத்தை நிறைவு செய்வார்" என்றார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News