தேர்தல் வெற்றிக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை - புறம் பேசிய வாயை அடைத்த மத்திய மந்திரி!
ராமர் கோவில் கும்பாபிஷேகம் தேர்தல் வெற்றிக்காக அல்ல என மத்திய மந்திரி கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.
By : Karthiga
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22- ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருகிறது. தேர்தல் ஆதாயத்திற்காக பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் இந்த விழாவை அரசியல் திட்டமாக மாற்றி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் விழாவையும் புறக்கணித்துள்ளன. ஆனால் இது தேர்தல் வெற்றிக்காக அல்ல என மதிய மந்திரியும் தெலுங்கானா பாஜக தலைவர் ஆன கிருஷ்ணன் ரெட்டி மறுத்துள்ளார் .இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முஸ்லிம்கள் உட்பட ஒட்டுமொத்த தேசமும் இந்த தருணத்துக்காகவே காத்திருக்கின்றது.இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இந்துக்களும் இந்த நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றன. 550 ஆண்டு போராட்டத்தின் பலன் இது. இதற்காக ஏராளமானோர் பாடுபட்டனர். ஏராளமானோர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இது ஒரு கட்சி நிகழ்ச்சி அல்ல .ஆன்மீக நிகழ்ச்சி. நாடு விடுதலை அடைந்த பின் நிகழும் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்ச்சி.
இதை ஒரு கட்சியுடன் தொடர்புபடுத்துவது நல்லதல்ல. இதற்கும் பா ஜனதாவுக்கும் சம்பந்தமில்லை.ராமபிரானின் பக்தர்களாகவே எங்கள் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் விழாவில் பங்கேற்கின்றனர். ராமர் கோவிலுக்காக முதலில் நாங்கள் யாத்திரை நடத்தினோம். நீங்கள் எல்லோரும் போலி மதச்சார்பற்றவர்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறீர்கள். இவ்வாறு கிஷன் ரெட்டி கூறினார்.
SOURCE :DAILY THANTHI