27 வருடங்களுக்கு முன் தொடங்கிய மோடியின் போராட்டம் 370-ஐ நீக்குக!வைரலாகும் புகைப்படம்
27 வருடங்களுக்கு முன் தொடங்கிய மோடியின் போராட்டம் 370-ஐ நீக்குக!வைரலாகும் புகைப்படம்
By : Kathir Webdesk
72 ஆண்டுக்கால வரலாற்று பிழையை தற்போதுள்ள மோடி அமித் ஷா கூட்டணி திருத்தி உள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட அரசியலமைப்பு சட்டதை நீக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டன. ஜனசங்கம் இதை உயிர் மூச்சாக கொண்டு போராட்டங்களை நடத்தியது . அதற்கான பலன்கள் நேற்று கிடைத்தது.
370 மற்றும் 35-ஏ பிரிவு ரத்துசெய்யப்பட்டது. 370 பிரிவை நீக்க கோரி 27 வருடங்களுக்கு முன் போராட்டம் நடத்திய பிரதமர் மோடியின் புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் மோடி இளம் வயதில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்க கோரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதில் இளம் வயது மோடி காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவிற்கு எதிராக அமர்ந்து போராட்டம் நடத்துகிறார் பின்னணியில் வைக்கப்பட்ட பேனரில் '370 -ஐ நீக்கு, பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டு, தேசத்தை காப்பாற்று' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது தான் விடா முயற்சி! விஸ்வரூப வெற்றி ! என பலரும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்