Kathir News
Begin typing your search above and press return to search.

டுவிட்டரில் 'புளூ டிக்' கணக்குகளுக்கு கட்டணம் எப்படி எடுக்கப்படும்?

டுவிட்டரில் 'புளூ டிக்' கணக்குகளுக்கு மாதம் ரூபாய் 660 கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவிப்பு விடுத்துள்ளார்.

டுவிட்டரில் புளூ டிக் கணக்குகளுக்கு கட்டணம் எப்படி எடுக்கப்படும்?

KarthigaBy : Karthiga

  |  3 Nov 2022 9:15 AM GMT

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரால் பயன்படுத்தப்படுகிறது. டுவிட்டரில் அதிகாரபூர்வ கணக்கு என்பதை குறிப்பிடும் வகையில் புளூ டிக் வசதி உள்ளது.அரசியல் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் திரைத்துறை பிரபலங்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பிரபலமானவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் டுவிட்டரை வாங்கியுள்ள உலக பணக்காரர் எலான் மஸ்க் அதில் அதிரடி மாற்றங்களை கொண்டு வர முயற்சித்து வருகிறார்.


அந்த வகையில் டுவிட்டரில் கட்டணம் வசூலிக்க அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் பரவி வந்தன .தற்போது அதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்த அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் "பயனர்களின் உண்மை அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் 'புளூடிக்' முறைக்கு இனி மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றவாறு மாறுபடும். அவ்வாறு கட்டணம் செலுத்தி 'புளூ டிக்' பெரும் பயனாளர்களுக்கு பதில்கள், குறிப்புகள் மற்றும் தேடலின் முன்னுரிமை அளிக்கப்படும்.மேலும் அதிக நேரங்கள் கொண்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவிடும் வசதியும் பாதி விளம்பரங்கள் மட்டுமே இருக்கும் வசதியும் இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News