Kathir News
Begin typing your search above and press return to search.

வேறு எந்த நாட்டிலும் நிற்காமல் பயணம் செய்யும் புதிய கடல் பாதை - எலான் மஸ்க் வெளியீடு!

எலான் மஸ்க் புதிய இந்திய கடல் பாதை ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

வேறு எந்த நாட்டிலும் நிற்காமல் பயணம் செய்யும் புதிய கடல் பாதை - எலான் மஸ்க் வெளியீடு!
X

KarthigaBy : Karthiga

  |  2 Oct 2023 11:15 PM IST

ஜி-20 மாநாட்டில் சீனாவின் பட்டுப்பாதை போல புதிய பொருளாதார பாதை ஒன்றை இந்தியா உருவாக்கியது. அதை மற்ற நாடுகள் வரவேற்றன. தற்போது உலகின் மிகப்பெரும் பணக்காரரும் அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபருமான எலான் மஸ்க் இந்தியாவிற்கு வேறு எந்த நாட்டிலும் நிற்காமல் பயணம் செய்யும் புதிய கடல் பாதை வரைபடத்தை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.


அந்த பாதை 29 ஆயிரத்து 800 km தூரத்தை கொண்டதாகும். அமெரிக்காவிலிருந்து பனாமா கால்வாய் கடக்காமல் கருங் கடலையோ ஆப்பிரிக்க நாடுகளையோ தொடாமல் நேரடியாக இந்தியாவை அடைய வழிகாட்டுகிறது அந்த பாதை. அது நேராக அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்கா கட்டத்தை சுற்றி ஆப்பிரிக்கா கண்டத்தின் வழியாக வேறு எந்த நாடுகளின் நிலப்பரப்பை தொடாமல் நேரடியாக மும்பையை அடைந்துள்ளது . சிலர் இது ஒரு சிறந்த திட்டம் என்றும் வேறு சிலர் தலையை சுற்றி மூக்கை தொடும் வேலை என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News