Kathir News
Begin typing your search above and press return to search.

நஷ்டத்தில் கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க் ஒரே ஆண்டில் ரூபாய் 15 லட்சம் கோடி இழப்பு

ஒரே ஆண்டில் ரூபாய் 15 லட்சம் கோடியை இழந்து நஷ்டத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் எலான் மஸ்க்.

நஷ்டத்தில் கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க் ஒரே ஆண்டில் ரூபாய் 15 லட்சம் கோடி இழப்பு

KarthigaBy : Karthiga

  |  12 Jan 2023 8:00 AM GMT

உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்து வந்தவர் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் டுவிட்டரை மூன்றரை லட்சம் கோடி கொடுத்து வாங்குவதாக அறிவித்தார். அதற்கான நடைமுறைகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் நிறைவடைந்து டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமானது. டுவிட்டருக்கான தொகையை செலுத்துவதற்காக தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்கத் தொடங்கினார் எலான் மஸ்க்.


அதோடு தனது முழு கவனத்தையும் டுவிட்டர் மீது திருப்பியதாலும் 50 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் உட்பட டுவிட்டர் நிறுவனத்தில் சர்ச்சைக்குரிய மாற்றங்களை கொண்டு வந்ததாலும் அவர் மீது சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தாலும் டெஸ்லா நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வெளியேறி வருகின்றனர். இதனால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.


இதன் மூலம் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தை அவர் இழந்தார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 320 பில்லியன் டாலராக இருந்த நிலையில் தற்போது அது 137 பில்லியன் டாலராக சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 182 பில்லியன் டாலரை அவர் இழந்துள்ளார். உலக அளவில் மிக குறுகியகாலத்தில் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்தவர்கள் எவரும் இல்லை.இதன் மூலம் மனித வரலாற்றில் பெரும் நஷ்டத்தை சந்தித்த மனிதன் என கின்னஸ் பட்டியலில் எலான் மஸ்க் இடம் பெற்றுள்ளார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News