Kathir News
Begin typing your search above and press return to search.

ரேசர்பே, பேடிஎம் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை - ஏன் தெரியுமா?

ஆன்லைன் பணம் செலுத்தும் நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை சீன கடன் செயலிகள் வழக்கில் அதிரடி

ரேசர்பே, பேடிஎம் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை - ஏன் தெரியுமா?
X

KarthigaBy : Karthiga

  |  4 Sept 2022 5:30 PM IST

சீனாவை சேர்ந்தவர்களால் கட்டுப்படுத்தப்படும் கடன் செயலிகள் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.இந்த விசாரணையின் ஒரு பகுதியாக,ரசோர்பே,பே.டி.எம்,கேஷ்பிரீ ஆகிய ஆன்லைன் பணம் செலுத்தும் நிறுவனத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

பெங்களூருவில் 6 இடங்களில் நடந்த இந்த சோதனையில் சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனங்களின் வணிக அடையாள அட்டைகள் மற்றும் வங்கி கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ 17 கோடி மதிப்பிலான நிதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சீன கடன் செயலிகள் இந்தியர்களின் போலியான ஆவணங்களை பயன்படுத்தி அவர்களை போலி இயக்குனர்களாக மாற்றி சட்டவிரோத வருமானத்தை உருவாக்குவதாக கூறியுள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் மேற்படி நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News