Kathir News
Begin typing your search above and press return to search.

அமலாக்க துறை அதிரடி - 2000 ரூபாய் நோட்டுகளாக ரூபாய் ஒரு கோடி சிக்கியது

குஜராத் மட்டும் டாமனில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையில் 2000 ரூபாய் நோட்டுகளாக ஒரு கோடி சிக்கியது.

அமலாக்க துறை அதிரடி - 2000 ரூபாய் நோட்டுகளாக ரூபாய் ஒரு கோடி சிக்கியது
X

KarthigaBy : Karthiga

  |  22 Jun 2023 11:45 AM GMT

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் ஜக்குபாய் பட்டேல் .இவரும் இவருடைய கூட்டாளிகள் கேத்தன் பட்டேல், விபுல் பட்டேல், மிட்டன் பட்டேல் ஆகியோரும் 2018 ஆம் ஆண்டு டாமனில் நடந்த ஒரு இரட்டை கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளனர். அவர்கள் மீது டாமன் யூனியன் பிரதேசம் குஜராத்தின் வல்சாத், மும்பை ஆகிய ஊர்களில் கொலை கொல்ல முயற்சி, வழிப்பறி மதுபான கடத்தல் தொடர்பான 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன.


அவற்றில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக டாமன், குஜராத்தின் வல்சாத் ஆகிய இடங்களில் சுரேஷ் ஜக்கு பாய் பட்டேல் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு சொந்தமான ஒன்பது வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களில் அமலாக்கத்துறை சோதனைகளில் ஈடுபட்டது . அதில் ரூபாய் ஒரு கோடியே 62 லட்சம் ரொக்கம் சிக்கியது.


ரூபாய் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொகை 2000 ரூபாய் நோட்டுக்களாக இருந்தன. 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30- ஆம் தேதிக்கு பிறகு செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 100- க்கும் மேற்பட்ட சொத்துக்களுக்கான ஆவணங்கள் பண பரிமாற்ற ஆவணங்கள் 3 வங்கி லாக்கர் சாவிகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. அவர்களின் வங்கி கணக்குகளில் ரூபாய் 100 கோடி வரவழைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. குற்றச்செயல்களில் கிடைத்த பணத்தை பரிமாற்றம் செய்வதற்காக அவர்கள் போலியாக நிறுவனங்களை தொடங்கியதும் தெரிய வந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News