ஹிஜாப் அணிய சொல்லி கட்டாயம் - எதிர்ப்பாளர்களை ஒடுக்க வன்முறை : அதிரடி முடிவுக்கு தயாரான ஐரோப்பிய யூனியன்!
By : Kathir Webdesk
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது வன்முறை கையாளப்படுகிறது. அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் நேரம் இது. இந்த அதிர்ச்சியூட்டும் வன்முறைக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது என்று ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா தெரிவித்தார்.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஏற்கெனவே ஈரானின் முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. தற்போது ஐரோப்பிய யூனியனும் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.
ஏற்கனவே ஈரானில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2011-ஆம் ஆண்டிலேயே ஐரோப்பிய யூனியன் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையின் முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Input From: TimesNow