Kathir News
Begin typing your search above and press return to search.

பண மோசடி வழக்கில் சிக்கிய தேசிய பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரி - பாய்ந்த அமலாக்கத்துறை!

பண மோசடி வழக்கில் தேசிய பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரியின் 45 கோடி சொத்துக்கள் முடக்கம். அமலாக்கத்துறை நடவடிக்கை

பண மோசடி வழக்கில் சிக்கிய   தேசிய பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரி - பாய்ந்த அமலாக்கத்துறை!

KarthigaBy : Karthiga

  |  18 Jun 2023 6:15 AM GMT

எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வந்தவர் பிரவீன் யாதவர். இவர் மாற்றுப் பணியாக அரியானா மாநிலம் குருகி ராமில் உள்ள தேசிய பாதுகாப்பு படையில் கமாண்டராக நியமிக்கப்பட்டார். அப்போது என்.எஸ். ஜி கமாண்டோ படையில் தான் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருப்பதாக கூறி என்.எஸ் ஜி. யில் ஒப்பந்த பணிகளுக்கான போலியான ஆவணங்களை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கிய பணம் பெற்று மோசடி செய்தார்.

அந்த மோசடி பணத்தில் அசையும் அசையா சொத்துக்களை பிரவீன் யாதவும் அவரது குடும்பத்தினரும் வாங்கி குவித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஜனவரியில் பிரவீன் யாதவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது மனைவி மம்தா யாதவ், தனியார் வங்கி ஒன்றின் மேலாளராக பணிபுரியும் பிரவீன் யாதவியின் சகோதரி ரிது உள்ளிட்டவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

இந்நிலையில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் படி தேசிய பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரி பிரவீன் யாதவ் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 45 கோடி 20 லட்சம் மதிப்புள்ள 52 அசையும், அசையா சொத்துக்களை முடக்கி இருப்பதாக அமலாக்க இயக்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News