3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து ஆலயம்,தொன்மங்கள், நாணயங்கள், பானைகள், ஆயுதங்கள் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு
3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து ஆலயம்,தொன்மங்கள், நாணயங்கள், பானைகள், ஆயுதங்கள் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு
By : Kathir Webdesk
பாகிஸ்தான் அகழ்வாராய்ச்சியாளர்கள் உடன் இத்தாலி ஆராய்ச்சியாளர்களும் இணைந்து, வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் 3000 ஆண்டு பழமையான பாஜீரா நகரம் கண்டுபிடித்துள்ளனர். இந்த நகரத்தில் பல இந்து ஆலயங்கள் பல இந்து ஆலயங்களின் தொன்மங்கள், நாணயங்கள், பானைகள், ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன., இவற்றுள் சில 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தனவாக உள்ளன. கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அகழாய்வில் இந்து வழிபாட்டு முறை தடயங்கள், ஸ்தூபிகள், மண்பானைகள், நாணயங்கள், அந்த கால ஆயுதங்கள் ஆகியவை கிடைத்திருக்கின்றன.
ஸ்வாட் மாவாட்டத்தில் உள்ள இந்த பாஜீரா நகரத்துக்கு மாமன்னர் அலெக்ஸாண்டர் 326 கி.பி-யின் போது வந்துள்ளார். ஒடிகிராம் என்னும் போரில் பங்குபெற்று வென்ற அலெக்ஸாண்டர் பாஜீரா கோட்டையைக் கட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. அலெக்ஸாண்டருக்கு முந்தைய காலகட்டத்தில் இந்தோ- கிரேக்க மக்கள், புத்தமதத்தைப் பின்பற்றுவோர். இந்து வாழ்ந்து உள்ளதற்கான தொன்மங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.