Kathir News
Begin typing your search above and press return to search.

கங்கைகொண்ட சோழபுரம்: இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடக்கம்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் தற்போது இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தீவிரம்.

கங்கைகொண்ட சோழபுரம்: இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடக்கம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 Jan 2022 2:23 AM GMT

கங்கை கொண்டசோழபுரத்தில், கங்கை சமவெளி வரை தனது வெற்றிகரமான பயணத்திற்குப் பிறகு தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகள், இரண்டாம் கட்டப் பணிகளை மேற்கொள்ள அரசு நோக்கமாக இருப்பதாக தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார். அது மேலும் இந்த ஆராய்ச்சியில் சோழர்களின் பல்வேறு தடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் கூறுகிறார்கள். சுமார் 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராக கங்கை கொண்ட சோழபுரம் இருந்தது. ராஜேந்திர சோழன், வலிமையான படையையும், ஈடு இணையற்ற கடற்படையையும் கொண்டிருந்த பெருமைக்குரியவர். இவர்தான் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவிலைக் கட்டியது மட்டுமல்லாமல், நகரின் மேற்கே சோழகங்கம் என்ற பெரிய ஏரியையும் கட்டினார்.


இந்த ஏரி ஜலஸ்தம்பமாக கருதப்படுகிறது. இது கங்கை வரை அவரது வெற்றிகரமான அணிவகுப்பைக் குறிக்கிறது. தற்போது பொன்னேரி என்று அழைக்கப்படும் இது, இன்னும் இப்பகுதியில் மிகப்பெரிய ஒன்றாக உள்ளது. சோழ மன்னர்களின் அரண்மனைகள் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் பாண்டியர்களின் படையெடுப்புகளின் போது அல்லது பின்னர் அழிக்கப்பட்டது. 1980 களில் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், அதன் முதல் இயக்குனர் ஆர். நாகசுவாமி அவர்கள் தலைமையில் ஏற்கனவே ஒரு அரண்மனை மற்றும் நகரத்தின் மறைக்கப்பட்ட கட்டமைப்புகள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஏற்கனவே இங்கு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் முதல்கட்ட பணிகளில் பல்வேறு உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக முதலில் இருந்து அரண்மனை துணுக்குகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது இரண்டாம் கட்டப் பணிகள் பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து தொடங்கப்பட உள்ளது.இங்கு உள்ள மக்கள் இந்த ஆராய்ச்சி பணியில் ஈடுபடுவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.

Input & image courtesy: The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News