Kathir News
Begin typing your search above and press return to search.

பரபரக்கும் நாடாளுமன்ற தேர்தல் களம் - பிரதமர் மோடி நான்காம் தேதி சென்னை வருகை!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் களம் பரபரப்பாக சூடு பிடித்திருக்கிறது . பிரதமர் மோடி நான்காம் தேதி சென்னை வர இருக்கிறார்.

பரபரக்கும் நாடாளுமன்ற தேர்தல் களம் - பிரதமர் மோடி நான்காம் தேதி சென்னை வருகை!

KarthigaBy : Karthiga

  |  27 Feb 2024 2:00 AM GMT

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போது தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் 'என்மன் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 27-ம் தேதி நடைபெறுகிறது .


இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். அப்போது மோடி பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார். அதன்படி இந்த கூட்டத்திற்கு பிறகு பிரதமரை அண்ணாமலை சந்தித்து பேசுகிறார். இதில் தமிழக அரசியல் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு பா.ஜனதா கூட்டணி மற்றும் பா.ஜனதா போட்டியிட இருக்கும் தொகுதிகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது .மேலும் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது .இந்த நிகழ்வுக்கு பிறகு பிரதமர் மோடி மதுரையில் இரவு தங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


அப்போது நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வருகிற 28-ஆம் தேதி குலசேகரன் பட்டினத்தில் நடைபெறும் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளுக்கு மதுரையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அன்றைய தினமே நெல்லையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்று பேசுகிறார். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் நான்காம் தேதி தமிழகத்திற்கு மீண்டும் வருகை தர உள்ளார் .சென்னையில் பா.ஜ.க சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.


இந்த பொதுக்கூட்டத்தை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம் அல்லது பல்லாவரத்தில் உள்ள ஒரு மைதானத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இருப்பினும் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஒய்.எம்.சி. ஏ மைதானத்தை ஆய்வு செய்த பிறகு பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடம் இறுதி செய்யப்படும். இந்த பொதுக்கூட்ட மேடையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சி தலைவர்களும் இடம் பெறுகின்றனர்.


அவர்களுடன் மேடையில் கைகோர்க்கும் பிரதமர் மோடி அவர்களை வாக்காளர்களிடையே அறிமுகம் செய்து வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பா.ஜனதா முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பின்போது தமிழகத்தின் முக்கிய தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட உள்ளனர்.


SOURCE :kaalaimani.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News