Kathir News
Begin typing your search above and press return to search.

மலிவு விலையில் பிராட்பேண்ட் திட்டங்களால் மற்ற நிறுவனங்களை ஓரம் கட்டிய 'எக்ஸிடெல்'

400 எம்.பி.பி.எஸ் வேகத்தில் மலிவு விலையில் அதிக திட்டங்களை மக்களுக்காக தந்து அசத்தி வருகிறது எக்ஸிடெல் நிறுவனம்.

மலிவு விலையில் பிராட்பேண்ட் திட்டங்களால் மற்ற நிறுவனங்களை ஓரம் கட்டிய எக்ஸிடெல்
X

KarthigaBy : Karthiga

  |  7 Aug 2023 3:30 PM GMT

இந்தியா முழுவதும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களின் மொபைல், பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவைகள் வழங்குவதில் முன்னணியில் இருக்கின்றன. ஆனால் இந்த நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன.


அதன்படி ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் எக்ஸிடெல் எனும் புதிய பிராட்பேண்ட் நிறுவனம் மலிவு விலையில் திட்டங்களை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது. குறிப்பாக எக்ஸிடெல் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்யும் ஒவ்வொரு கம்மி விலை திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


குறிப்பாக எக்ஸிடெல் (Excitel) நிறுவனம் மூன்று அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது. அதாவது தி கிக்ஸ்டார்ட்டர் (the kickstarter), தி கேபிள் கட்டர் (the cable cutter), தி பீஸ்ட் (the beast)ஆகிய திட்டங்களைத் தான் கொண்டுள்ளது இந்த எக்ஸிடெல் நிறுவனம். மேலும் இப்போது இந்த திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.


தி கிக்ஸ்டார்ட்டர் (the kickstarter): குறிப்பாக ரூ.667 விலையில் தி கிக்ஸ்டார்ட்டர் திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு 3 மாதங்கள் வேலிட்டிட்டி உடன் 300 எம்பிபிஎஸ் வரையிலான இன்டர்நெட் வேகம் இருக்கும். அடுத்து ரூ.499 விலையில் கிடைக்கும் தி கிக்ஸ்டார்ட்டர் திட்டத்தை தேர்வு செய்யம் பயனர்களுக்கு 6 மாதங்கள் வேலிடிட்டி உடன் 300 எம்பிபிஎஸ் வரையிலான இன்டர்நெட் வேகம் இருக்கும்.


கடைசியாக ரூ.424 விலையில் கிடைக்கும் தி கிக்ஸ்டார்ட்டர் திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு 12 மாதங்கள் வேலிடிட்டி உடன் 300 எம்பிபிஎஸ் வரையிலான இன்டர்நெட் வேகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டங்களின் விலைக்கு ஏற்ப இன்டர்நெட் வேகம் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இப்போது தி கேபிள் கட்டர் திட்டங்களைப் பார்ப்போம்.


தி கேபிள் கட்டர் (the cable cutter): இதில் இரண்டு திட்டங்கள் தற்போது கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டங்களை தேர்வு செய்யும் பயனர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) போன்ற 12 ஓடிடி தளங்களின் சப்கிரிப்ஷன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஒரே நேரத்தில் டிவி சேனல்களையும், ஓடிடி வீடியோக்களையும் பார்த்துக் கொள்ள முடியும். இப்போது அந்த இரண்டு திட்டங்களைப் பார்ப்போம்.


அதாவது ரூ.847 விலையில் கிடைக்கும் தி கேபிள் கட்டர் திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு 3 மாதங்கள் வேலிடிட்டி உடன் 400 எம்பிபிஎஸ் வரையிலான இன்டர்நெட் வேகம் இருக்கும். அடுத்துப் பிரபலமான ரூ.599 விலையில் கிடைக்கும் தி கேபிள் கட்டர் திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு 12 மாதங்கள் வேலிடிட்டி உடன் 400 எம்பிபிஎஸ் வரையிலான இன்டர்நெட் வேகம் இருக்கும். அதேபோல் இந்த திட்டங்களின் விலைக்கு ஏற்ப இன்டர்நெட் வேகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


பீஸ்ட் (the beast): ரூ.717 விலையில் கிடைக்கும் தி பீஸ்ட் திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு 3 மாதம் வேலிடிட்டி உடன் 300 எம்பிபிஎஸ் வரையிலான இன்டர்நெட் வேகம் இருக்கும். அடுத்து இதில் உள்ள ரூ.550 திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு 6 மாதம் வேலிடிட்டியும், ரூ474 திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு 12 மாதங்கள் வேலிடிட்டியும் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டங்களுக்கு ஏற்ப இன்டர்நெட் வேகம் இருக்கும்.

அதேபோல் இந்த திட்டங்களுக்கு கனெக்சன் கொடுக்கும் செலவு, பாதுகாப்பு வைப்புத்தொகை மற்றும் கூடுதல் கட்டணங்கள் என்று எதுவும் வசூலிக்கப்படாது என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் எத்தனை டிவைஸ்களில் வேண்டுமானாலும், இன்டர்நெட்டை கனெக்ட் செய்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்டர்நெட் வேகத்தில் மாறுபாடு ஏற்படுமே தவிர இணைப்பு துண்டிக்கப்படாது.


SOURCE :tamil.gizbot.com



Next Story
கதிர் தொகுப்பு
Trending News