விரிவடைகிறது சென்னை - 1221 கிராமங்களை சென்னையில் சேர்த்து அறிவிப்பை வெளியிட்டது சி.எம்.டி.ஏ
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அறிவிப்பால் சென்னை எல்லை ஐந்து மடங்காக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
By : Mohan Raj
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அறிவிப்பால் சென்னை எல்லை ஐந்து மடங்காக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சி.எம்.டி.ஏ எல்லை ஐந்து மடங்காக விரிவடைந்துள்ளது, இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் எல்லை 1189 சதுர கிலோ மீட்டரில் இருந்து 1221 கிலோமீட்டர் இணைத்து புதிதாக 5094 சதுர கிலோமீட்டர் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக எல்லை சென்னை மாவட்டம் தவிர்த்து அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சில பகுதிகளை உள்ளடக்கி 1189 சதுர கிலோமீட்டர் அளவுக்கு தற்போது அமைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக எல்லை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்கள் மற்றும் வேலூரில் அரக்கோணத்தை உள்ளடக்கி 8,878 சதுர கிலோமீட்டர் அளவில் சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து 179 கிராமங்கள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டன. இந்நிலையில் தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தி.மு.க ஆட்சியில் சென்னை எல்லை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கின. இந்த பணிகள் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டையில் அரக்கோணம் அருகில் 1221 கிராமங்களை புதிதாக இணைத்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும வரையறைக்குள் சேர்க்கப்பட்டன என அந்த அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.