Kathir News
Begin typing your search above and press return to search.

ஆறாம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் ரம்மி விளையாட்டு - இளமையில் ரம்மி விளையாட தூண்டும் தமிழக பாடநூல் நிறுவனத்தின் அசத்தல் ஐடியா

ஆறாம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் ரம்மி விளையாட்டு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு நீக்கப்படும் என கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஆறாம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் ரம்மி விளையாட்டு - இளமையில் ரம்மி விளையாட தூண்டும் தமிழக பாடநூல் நிறுவனத்தின் அசத்தல் ஐடியா

KarthigaBy : Karthiga

  |  3 Dec 2022 6:15 AM GMT

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருக்கும் சூழ்நிலையில் ஆறாம் வகுப்பு கணித பாடப்புத்தகத்தில் எண் தொகுப்பு என்ற பாடத்தில் அதனை விளக்கம் விதமாக 'ரம்மி' சீட்டு கட்டுகளை கொண்டு பாடத்துடன் பிரசுரித்து இருப்பது மீண்டும் பிரச்சனையை கிளப்பி இருக்கிறது .இந்த பிரச்சனை தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே இந்த செய்திகள் வெளி வந்தது. அப்போது கல்வித் துறை இது பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தது. தற்போது மீண்டும் இந்த செய்தி நேற்று வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.


இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பாட புத்தகத்தில் இடம் பெற்று இருக்கும் அந்த பாடத்தை அடுத்த கல்வி ஆண்டில் புத்தகம் அச்சடிப்பதற்கு முன்பாக நீக்கிவிட்டு அதற்கு மாறாக வேறு விளக்கங்கள் கொடுக்கப்படும் என்று கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News