Kathir News
Begin typing your search above and press return to search.

காபூல் விமானநிலைய குண்டுவெடிப்பில் 13 பேர் பலி: பின்னணியில் யார் ?

காபூல் விமான நிலையத்தில் ISIS பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

காபூல் விமானநிலைய குண்டுவெடிப்பில் 13 பேர் பலி: பின்னணியில் யார் ?

Saffron MomBy : Saffron Mom

  |  27 Aug 2021 1:31 AM GMT

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 26) அன்று காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் சில அமெரிக்க ராணுவ வீரர்களும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பல தலிபான் காவலாளிகள் காயமடைந்தனர் என்று தலிபான் அதிகாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். இந்த மாத தொடக்கத்தில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, நாட்டை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்திற்கு வெளியே கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலைப்படை தீவிரவாதிகள் விமான நிலையத்தை தாக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக தங்களுக்கு உளவு கிடைத்ததாக அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் அதிகாரிகள் கூறியதாக பென்டகன் தெரிவித்துள்ளது.





பிரெஞ்சு தூதுவர் ஏற்கனவே விமான நிலையத்தில் இரண்டாவது தாக்குதல் பற்றி எச்சரித்துள்ளார் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த குண்டு வெடிப்பு குறித்து ஜனாதிபதி ஜோ பிடனுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பிடென் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பில் இருந்தார். அமெரிக்கா தனது 20 ஆண்டு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இறுதி கட்டத்தில் உள்ள போது இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், காபூல் விமான நிலையத்தில் ISIS பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

"தலிபான்கள் சர்வதேச சமூகத்திற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள் மற்றும் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை தங்கள் செயல்பாடுகளுக்கான தளமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள்" என்று தலிபான் செய்தி தொடர்பாளர் கூறினார்.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி தனது இராணுவம் நாட்டை விட்டு முழுமையாக வெளியேறுவதற்கு முன்னர், விமானப் பயணங்களை முடிக்கும் பணியில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

காபூல் விமான நிலையத்தைத் தவிர்க்குமாறு பல நாடுகள் மக்களை வலியுறுத்தின, மேலும் அங்கு தற்கொலை குண்டுவெடிப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு அதிகாரி கூறினார். ஆனால் பலரும் இந்த எச்சரிக்கைகளை துரதிஷ்டமாக கவனிக்கவில்லை.


Cover Image Courtesy: TOLO news

Next Story
கதிர் தொகுப்பு
Trending News